பேச்சு:reference
தலைப்பைச் சேர்ரவி, proof = ஆதாரம். referenceற்கு மேற்கோள் சரியாகத் தான் தெரிகிறது. --Omanickam 21:42, 6 செப்டெம்பர் 2006 (UTC)
- மாணிக்கம், to refer (some source) = (ஆதாரம் ஒன்றை) சரி பார், (ஆதாரம் ஒன்றை) மேற்கோளாகக் காட்டு எனப் பொருள் கொள்ளல்லாம் தானே? அப்படியென்றால், reference = (மேற்கோளிடப்படும்) ஆதாரம் என்பது பொருள் சரியாக வருவது போல் தானே இருக்கிறது. on his reference என்ற சொற்றொடரை, அவரது பரிந்துரையின் பேரில் என்பது போல் தமிழாக்குவது பொருத்தமாக இருக்கலாம். இந்த இடங்களில், அவரது மேற்கோளின்படி என்று கூறும் வழக்கமும் இல்லை என்று நினைக்கிறேன்--ரவி 10:52, 10 செப்டெம்பர் 2006 (UTC)
- அப்படியென்றால் proofற்கு 'ஆதாரம்' சரிதானா? இல்லை 'அத்தாட்சி' என்று மாற்றலாமா? மேற்கோளுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு என்ன? quote? quotation? --Omanickam 14:57, 12 செப்டெம்பர் 2006 (UTC)
prove = நிறுவு (தமிழ்நாட்டடுப் பாடநூல் வழக்கு) என்றால் proof = நிறுவம் என்று வைத்துக்கொள்ளலாமா? நிறுவம் என்ற சொல் சில இடங்களில் வாசித்த நினைவு உண்டு. proof = ஆதாரம் என்பதும் சரிதான். அத்தாட்சி = evidence, proof என்ற பொருள்களிலும் வரும். எங்கள் ஊரில் அத்தை, மாமாவின் பெண்களை அத்தாச்சி என்போம். அது அத்தாட்சியா அத்தாச்சியா என்பதில் எனக்குத் தெளிவில்லை. விக்சனரி மீது தற்பொழுது கூடுதல் கவனம் கிடைத்து வருகிறது. மேலும், விளம்பரப்படுத்த முயற்சிகள் எடுத்து வருகிறேன். எனவே, பக்கங்களில் பொருள் சேர்ப்பதில் நாம் கூடுதல் கவனம் எடுக்க வேண்டி இருக்கிறது (பார்க்க: பேச்சு:மொழிபெயர்ப்பு). குறைந்தபட்சம், ஐயம் எழும் இடங்களில் வார்ப்புரு:சரிபார் பயன்படுத்தலாம். உமாசுதன் போன்றோர் புதுச்சொற்களை சேர்த்து விக்சனரியின் வளர்ச்சி வேகத்தை சீராக வைத்திருக்கும் அதே வேளை, பிற பயனர்கள், விக்சனரி பக்கங்களை பிழை திருத்தல், சரி பார்த்தல், மேம்படுத்தல் ஆகிய பணிகளில் ஈடுபடலாம் என்று வேண்டுகிறேன். --ரவி 15:11, 12 செப்டெம்பர் 2006 (UTC)