பேச்சு:televangelist
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by George46
Graham என்பதை கி'ராம் என்பது போலத்தான் பலுக்க வேண்டும். கிரஃகாம் என்பது போல பலுக்குவது சரியானதல்ல.--செல்வா 17:03, 27 மே 2010 (UTC)
- செல்வா, தமிழ் முறைக்குப் பொருத்தமும் அதுவே.--George46 22:57, 27 மே 2010 (UTC)
- பறைநர்-->பறைஞர் எது சரி?த*உழவன் 00:24, 28 மே 2010 (UTC)
- பறைஞர் என்பது அறிஞர், கலைஞர் என்பனபோல பீடுடையதாக இருக்கிறது. பழ.கந்தசாமி 00:42, 28 மே 2010 (UTC)
பறைநர்/பறைஞர்
[தொகு]- ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்வோருக்கு நன்/நர் என்னும் விகுதி கையாளப்படுகிறது. திருக்குறள், புறநானூறு, தேவாரம் போன்ற நூல்களைப் புரட்டியபோது கண்டவை இவை:
- ஆடுநர் (புறம் 30); இகழுநர் (புறம் 21); வாழ்நர் (புறம் 9,33); பொருநன் (புறம் 61, 68), பருகுநர் (புறம் 68).
- அதுபோலவே, திருக்குறளில் கொழுநன் (குறள் 55) வருகிறது.
- ஞன்/ஞர் விகுதி வேறு சில இடங்களில் வருகிறது:
- உழைஞர் (அப்பர் தேவாரம் 651); கிளைஞர் (குறள் 796); வினைஞர் (புறம் 61).
இவற்றைப் பார்க்கும்போது ஐயில் முடியும் சொல் ஞன்/ஞர் ஏற்பதுபோல் தெரிகிறது. --George46 05:57, 28 மே 2010 (UTC)