பேச்சு:wedding

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கல்யாணம், விவாகம் இவை ஏன் வராது? விளக்கவும்.

தமிழ் விக்சனரியில் எம்மொழிச் சொல்லுக்கும் நல்ல தமிழ்ச் சொல்லில் விளக்கவும் தருவதை கொள்கையாக கொண்டுள்ளோம். wedding என்பதற்கு திருமணம் என்பது புழக்கத்தில் உள்ள நல்ல தமிழ்ச்சொல். அதற்கு இணையான வேறு தமிழ்ச் சொற்கள் இருந்தாலும் தருகிறோம்.
எடுத்துக்காட்டுக்கு, flower என்பதற்கு பூ, மலர் என்று இரு தமிழ்ச்சொற்களை பொருளாகத் தந்திருபதை காணவும். அவ்வாறான இணைச் சொற்களை ஒரே வரியில் அடுத்தடுத்து தருவதையும் கொண்டிருக்கிறோம். ஒன்றன் கீழ் தரும்போது ஒன்றாக தரும்போது அவை வெவ்வேறு பொருளுடையதாக கருதப்படும். எனவே, முதற்கண், கல்யாணம், விவாகம் என்பதை ஒன்றன் கீழ் ஒன்றாகத் தந்தது பிழை. அடுத்து, விவாகம் என்பது அவ்வளவாகப் புழக்கத்தில் இல்லாத அருகி வரும் வட மொழிச்சொல்லாக இருக்கக்கூடிய பயன்பாடு. எனவே அதை தவிர்த்திருக்கிறேன். கல்யாணம் என்பது புழக்கத்தில் இருந்தாலும் அது தமிழ்ச்சொல் தானா என்பதில் உறுதி இல்லை. எனினும், இவ்வாறு செய்வது வேற்று மொழி எதிர்ப்பாக கருத வேண்டாம. தமிழில் எண்ணற்ற அவசியமற்ற பிற மொழிக்கலப்புகள் உள்ளன. அவற்றை இயன்ற அளவு தவிர்க்கலாம் என்பது தமிழ் விக்கிபீடியாவில் நாளடைவில் உருவான மனமொத்த கொள்கை (பார்க்க:w:ta:Wikipedia பேச்சு:சொல் தேர்வு). அதையே விக்சனரியிலும் பின்பற்றலாம் என்பது என் பரிந்துரை. மாற்றுக்கருத்து இருந்தாலும், இங்கு தனியாக உரையாடி கொள்கையை இறுதி செய்யலாம். ஒரு ஆங்கிலச் சொல்லுக்கு சரியான புழக்கத்தில் தமிழ்ச்சொல் இல்லாத பொழுது பிற மொழிச் சொற்களை கொண்டு பொருள் விளக்குவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், student என்பதற்கு
சிஷ்யர் என்று பொருள் தருவதும் region என்பதற்கு பிராந்தியம் என்று பொருள் தருவதும் அவசியமற்றது. பிராந்தியம், சிஷ்யன் ஆகிய சொற்கள் வழக்கொழிந்து வரும் பிற மொழிச்சொற்கள். அழகாக, மாணவன், வட்டாரம், நிலப்பகுதி, பகுதி என்பது போல் பொருள் தரலாமே? கனியிருப்பக் காய் ஏன் கவர வேண்டும் ? அதே சமயம் நாம் எந்த சொல்லையும் ஒதுக்குவது இல்லை என்பதையும் நீங்கள் கவனிக்கலாம். விவாகம், இராத்திரி போன்ற பிற மொழிக் கலப்புச் சொற்களுக்கு தனிப்பக்கங்கள் உருவாக்கப்பட்டு அங்கு அவற்றுக்கு நல்ல தமிழில் பொருள் விளக்கப்படுகிறது. அச்சொற்களின் வேர்ச்சொல், மூல மொழி ஆகியவை மொழியியல் ரீதியில் ஆராயப்படவும் வாய்ப்பு உள்ளது. கல்யாணம், விவாகம் போன்ற சொற்கள் சாமாடனியனுக்கு புரியும், திருமணம் புரியாமல் போகும் என்ற அச்சமும் தேவையில்லை. திருமணம் என்ற உள்ளிணைப்பை பின்பற்றி அதன் பொருளை எளிமையாக அறிந்து கொள்ளலாமே? யாராலும் பொருள் புரிந்து கொள்ள இயலாத கடினமான புதுத் தமிழ்ச்சொற்களை புகுத்துவதும் விரும்பத்தக்கதல்ல; ஏற்கனவே, பயன்பாட்டில் உள்ள நல்ல தமிழ்ச்சொல்லை ஓரங்கட்டுவதும் வரவேற்கத்தக்கதல்ல.--ரவி 05:49, 5 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

நன்றி... உமா

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:wedding&oldid=16016" இலிருந்து மீள்விக்கப்பட்டது