பொன்வண்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


இந்திய பொன்வண்டு
பொன்வண்டு:
பொன்வண்டுகள்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பொன்வண்டு, பெயர்ச்சொல்.

  • மினுமினுப்பின் காரணமாக, இப்பெயர் பெறுகிறது.மஞ்சள், பச்சை நிறத்திலும் காணப்படுகிறது.
  • இவற்றில் பல இனங்கள் உள்ளன.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  1. jewel beetle
  2. golden beetle ஆங்கிலம்
விளக்கம்
  • தமிழகத்தில் இதன் இறகுகள் உறுதியாக இருக்கும். தலைப்பகுதி இளம் பச்சை வண்ணத்தில் 'மினு மினு' என மின்னும். கொன்னை மரத்து இலைகளை விரும்பி உண்ணும். இளம் மஞ்சள் வண்ணத்தில் சிறிய முட்டைகளை இடும். முன்பு, சிறு குழந்தைகள் இதனைப்பிடித்து, நூலில் கட்டி விளையாடுவர்; இவ்வண்டும் 'உர்ர்ர்ர்...' என்று பறந்தபடியே இருக்கும். ஆனால், பிற்காலத்தில் இச்செயல்(இவ்வண்டினைப் பிடித்து விளையாடுவது), 'சிற்றுயிர்களைத் துன்பப்படுத்துதல் கூடாது' என்று (குழந்தைகளுக்கு அறிவூட்டப்பட்டதால்) கைவிடப்பட்டது.
(இலக்கியப் பயன்பாடு)
  • போந்ததென் னெஞ் சென்னும் பொன்வண்டு (திவ். இராமானுச. 100).


"https://ta.wiktionary.org/w/index.php?title=பொன்வண்டு&oldid=1187461" இருந்து மீள்விக்கப்பட்டது