உள்ளடக்கத்துக்குச் செல்

பொறுத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

பொறுத்து , (வி)

  • தாங்கி, ஏற்று
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • depending on
விளக்கம்
பயன்பாடு
  • பொருத்து எனும் சொல், ஒன்று சேர், இணைப்புச் செய் என்று பொருள்தருகிற கட்டளைச் சொல். பொறுத்து எனில் தாங்கி, ஏற்று என்று பொருள் தருகிற எச்ச வினைச் சொல் (வினையெச்சம்). இச்சொல் முற்றுப் பெறவில்லை. வேறொரு சொல் கொண்டு முடிக்க வேண்டும் .
  • நீரின் அளவைப் பொறுத்து தாமரை உயரும்.
  • என்னைப் பொறுத்தவரையில் என்றால் நான் கொண்டுள்ள கருத்தைக் கொண்டு பார்க்கும்போது எனும் பொருள் தருவதைக் காணலாம்.
  • கருநாடகச் சட்டப் பேரவைப் பெரும்பான்மை பற்றிய முடிவு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொறுத்தே அமையும். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தாங்கி அல்லது ஏற்று முடிவு காணப்படும். (நீதிமன்றத் தீர்ப்பைத் தள்ளிவிட முடியாது. அதனையும் தாங்கித் தன் பெரும்பான்மை பற்றி முடிவு செய்யப்படும்). (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக் கதிர் )

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

  • வினையெச்சம்

ஆதாரங்கள் ---பொறுத்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பொருத்து - பொருந்து - பொறு - பொறுமை - பொறை - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொறுத்து&oldid=899404" இலிருந்து மீள்விக்கப்பட்டது