பொருத்து
Appearance
ஒலிப்பு
|
---|
பொருள்
பொருத்து , (வி)
- பொருந்தச்செய். சந்துகள் புல்லறப் பொருத்துவதொன்று (கம்பரா. மருத்துமலை. 90)
- உடன்படச் செய். பொருடரும்படி யின்றுபொருத்தி (அரிச். பு. வஞ்ச. 8)
- கூட்டு பிரிந்தார்ப்பொருத்தலும் வல்ல தமைச்சு (குறள்.633)
- வேலைக்கமர்த்து
- அமையச்செய்
- இருபொருள்களை இணை
- தீபம் முதலியன ஏற்று
- போர் மூட்டு வாரணம் பொருத்துவாரும் (கம்பரா. நாட்டுப். 16)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- fit, adapt, prepare, adjust
- induce consent
- cause to agree; reconcile
- engage for labour
- bring over, as to a party or an opinion
- join together, knit, unite
- kindle; light, as a lamp
- stir up, as to a fight; instigate
பயன்பாடு
- பொருத்து எனும் சொல், ஒன்று சேர், இணைப்புச் செய் என்று பொருள்தருகிற கட்டளைச் சொல். பொறுத்து எனில் தாங்கி, ஏற்று என்று பொருள் தருகிற எச்ச வினைச் சொல் (வினையெச்சம்) இச்சொல் முற்றுப் பெறவில்லை. வேறொரு சொல் கொண்டு முடிக்க வேண்டும் . (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக் கதிர் )
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
பொருள்
பொருத்து ,
- இணைப்பு
- உடல்மூட்டு. பொருத்தெலாங் கட்டுவிட்டு (பணவிடு. 298)
- மரத்தினிணைப்பு
- மரக்கணு
- ஒன்றுசேர்க்கை. பொருத்துறு பொருளுண்டாமோ (கம்பரா.கும்பகர்ண. 157)
- ஒப்பந்தம்
- கன்னப்பொட்டு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- joining, junction, confluence
- joint, suture of bones in the body
- joining, in carpentry
- knot of a plant
- uniting
- agreement, engagement
- temple of the head
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +