உள்ளடக்கத்துக்குச் செல்

மடக்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மடக்குதல், பெயர்ச்சொல்.
  1. மடித்தல்
    (எ. கா.) வால்லிசைத் தெடுத்து வன்றாண் மடக்கி (கம்பரா. கடறாவு. 17)
  2. திருப்புதல். தடுத்திடை மடக்குதன் மானும் (காஞ்சிப்பு. நகர. 6)
  3. மாறிமாறிச் செய்தல் (W.)
  4. வென்று கீழ்ப்படுத்துதல் (W.)
  5. வாயடக்குதல் (W.)
  6. கால்நடை முதலியவற்றை ஒருசேர அடக்கி வைத்தல். இந்த வயலுக்கு ஒருநாள் மாட்டுக்கடை மடக்கவேண்டும்
  7. பண்டம் முதலியவற்றைத் தன்வசப்படுத்துதல் (W.)
  8. தடுத்தல் (W.)
  9. அழித்தல். மடக்குவாயுயிரையென்னா (கம்பரா. கும்பக. 188)
  10. பணிவாக்குதல் (W.)
  11. உடற்கட்டுக் குலைத்தல் (W.)
  12. மருந்து முதலியவற்றின் கடுமை முதலியவற்றை முறித்தல் (W.)
  13. தானிய அரி யறுத்தல் (W.)
  14. உடுத்துதல். மடக்கினார் புலியின்றோலை (தேவா. 955, 1)
  15. ஒதுக்கிக் கட்டுதல் (செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  16. திரும்பத்திரும்பவருதல். ஒரெழுத்து மடக்கலும் (தண்டி. 95)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To bend, as the arms, knees; to draw in, fold, shut, as a knife; to double; to deflect
  2. To turn, turn about, as a horse, carriage or vessel; to turn back
  3. To repeat
  4. To subdue, as in war, conquer; to surpass
  5. To stop by argument or sophistry; to confute; to overpower
  6. To compress; to restrain; to keep together, as cattle in a row
  7. To engage, as a servant; to secure for oneself, as an article or cargo, preventing others form obtaining it
  8. To stop or hinder, as proceedings; to quash
  9. To destroy; to kill
  10. To tame, humble
  11. To break the constitution, as disease
  12. To counteract, as force; to reduce, as the power of a medicine, the action of a poison; to check, as a fire from spreading
  13. To reap, as sheaves of corn
  14. To wear around the waist, as a garment
  15. To parcel out and enclose, as a piece of land
  16. To recur, as letters or works



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மடக்குதல்&oldid=1261525" இலிருந்து மீள்விக்கப்பட்டது