உள்ளடக்கத்துக்குச் செல்

மணிப்புங்குக்காய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
மணிப்புங்குக்காய்:
உலர்ந்தவை
மணிப்புங்குக்காய்:
பச்சையானவை
(கோப்பு)

sapindus emarginatus-Nuts...(தாவரவியல் பெயர்)

பொருள்

[தொகு]
  • மணிப்புங்குக்காய், பெயர்ச்சொல்.
  1. பூவந்தி
  2. சோப்புக்காய்
  3. பூவந்திக் கொட்டை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. soap berry
  2. soap nut

விளக்கம்

[தொகு]
  1. இத்தக் காய்களின் உலர்ந்த சதைப்பகுதியை இடித்து, நீரில் சற்று ஊறவைத்துப் பிழிந்தால், மிகுந்த நுரையோடு, நறுமணத்தோடுக் கூடிய, திடமான நீர்மம் உண்டாகும்...இதை எண்ணெய் வைத்தத் தலையில் தேய்த்துக் குளித்தால் எண்ணெய் பிசுக்கும், அழுக்கும் அறவே நீங்கிவிடும்...
  2. இந்தக் காய்களின் கொட்டைக்குள்ளிருக்கும் பருப்பில் 2-3 குன்றி எடை நசுக்கி, முலைப்பாலில் ஊறப்போட்டு, வடிகட்டி மூக்கின் வழியாக 2-3 துளி விட, மூக்கிலும் வாயிலும் கபத்தை வெளியாக்கும்...இதனால் மூர்ச்சை, பற்கிட்டல், காக்கைவலி முதலியவைகள் போகும்...
  3. தினமும் அணியக் கூடிய கம்மல், மோதிரம், சங்கிலி, வளையல் போன்ற தங்க நகைகள், அதிகப் பயன்பாட்டால் மங்கிப்போகும்...அச்சமயத்தில் உலர்ந்த மணிப்புங்குக்காய் கழுவிய நீரில் போட்டு, சற்றுக் கைவிரல்களால் அல்லது மெல்லிய புருசால் தேய்த்து எடுத்தால் புத்தம் புது நகைகளைப் போல் ஒளிரும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=மணிப்புங்குக்காய்&oldid=1460679" இலிருந்து மீள்விக்கப்பட்டது