உள்ளடக்கத்துக்குச் செல்

மணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மணி:

(பெ)

  • ஒளி வீசும் வைரம் போன்ற கல்
  • அழகு. (எ.கா. மணி மணியாக எழுதுதல்)
  • பாசி
  • வெண்கலத்தால் செய்த, நடுவில் நாவுடன் அமைந்து, ஆட்டினால் ஒலி எழுப்பும்

கவிழ்ந்த கிண்ணம் போன்ற கருவி

  • 60 நிமிட கால அளவு.காலத்தைக்குறிக்கும் பெயர் - பண்டைய காலத்தில் வெண்கலத்தால் ஆனா மணியோசை கொண்டு நாள் வேளை உணர்த்தப்பட்டது. எனவே நேரத்தைக்குறிக்க மணி என்ற சொல்லே காரணப்பெயர் ஆனது.
  • சிறியது -- மணித்தக்காளி (மணத்தக்காளி), மணிப்புறா, மணிக்கயிறு உள்ளிட்ட சொற்கள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம், (பெ)
  1. gem, 2) jewel, 3) bead, 4) bell, 5) gong, 6) hour of the day.

பல்வகை மணிகள்[தொகு]


ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - மணி

சொல்வளம்[தொகு]

மணிமாலை - மணிமேகலை - மணிக்கட்டு - மணிக்கூடு - மணித்துளி - மணிச்சட்டம்
மணிமுடி, மணித்தக்காளி
கண்மணி - குன்றிமணி - பொன்மணி - வெண்மணி
"https://ta.wiktionary.org/w/index.php?title=மணி&oldid=1993074" இலிருந்து மீள்விக்கப்பட்டது