உள்ளடக்கத்துக்குச் செல்

மண்டூகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (தமி), (பெ ) - மண்டூகம் 1)தவளை , 2) அறிவுத்திறன் குன்றியவன் / குறைந்தவன்

வார்ப்புரு:மொழி பெயர்ப்பு* (ஆங்), (பெ ) - 1) frog, 2) doltishperson

பயன்பாடு
  • பூலோகத்திலுள்ள அழகர்மலை தீர்த்தத்தில் அமர்ந்து சுதபஸ் மகரிஷி, பெருமாளை நினைத்து தியானத்தில் இருந்தார். அவரைக் காண துர்வாச முனிவர் வந்தார். பெருமாளின் நினைப்பில் இருந்ததால், துர்வாசரை சரியாக உபசரிக்கவில்லை. கோபமடைந்த துர்வாசர், "நீ மண்டூகமாக (தவளை) போ!" என சாபமிட்டார்.(அழகர் வந்தார்; அருளை தந்தார், தினமலர் வாரமலர், 6 மே 2012)

(இலக்கியப் பயன்பாடு)

  • தண் தாமரையின் உடன் பிறந்தும்
தண்டே நுகரா மண்டூகம் (விவேகசிந்தாமணி) - குளத்தில் தாமரையோடு பிறந்தாலும் அதை நுகர்ந்தே பார்க்காத தவளை
"https://ta.wiktionary.org/w/index.php?title=மண்டூகம்&oldid=1934912" இலிருந்து மீள்விக்கப்பட்டது