மந்திரித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மந்திரித்தல், பெயர்ச்சொல்.
  1. மந்திரசக்தியால் அடக்குதல்
  2. மந்திரத்தால் சக்தியுண்டாகச் செய்தல்
    (எ. கா.) நீரை மந்திரித்துக் கொடுத்தான்
  3. மந்திரத்தால் தியானித்தல்
    (எ. கா.) மந்திரிப்பார் மனத்துளானை (தேவா. 590, 4)
  4. ஆலோசித்தல்
    (எ. கா.) மகட்பேசி மந்திரித்து (திவ். நாய்ச். 6, 3) (செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  5. மந்திரஞ் செபித்தல்
    (எ. கா.) சிரத்தினஞ்சுற்ற பின்னை மீண்டிட மந்திரிப்பார் (பிரபோத 5, 7)
  6. துராலோசனை சொல்லுதல் (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To keep spell-bound, control or enchant by mantras
  2. To consecrate with mantras
  3. To recite mystic formulas or mantras in worship and to meditate
  4. To consult, take counsel
  5. 1. To utter mantras for effecting cure, etc.
  6. To give evil advice



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மந்திரித்தல்&oldid=1261294" இலிருந்து மீள்விக்கப்பட்டது