உள்ளடக்கத்துக்குச் செல்

மாற்றுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

12345678

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மாற்றுதல், பெயர்ச்சொல்.
  1. வேறுபடுத்துதல்
    (எ. கா.) பிறப்பு மாற்றினை (கம்பரா. வீபீஷண. 8)
  2. செம்மைப்படுத்துதல் (W.)
  3. நீக்குதல்
    (எ. கா.) அப்பசியை மாற்றுவார் (குறள். 225)
  4. கெடுத்தல் (W.)
  5. ஓடச்செய்தல்
    (எ. கா.) வில்லோர் மாற்றி (ஐங்குறு. 267)
  6. தடுத்தல்
    (எ. கா.) மாற்றருங் கூற்றம் (தொல். பொ. 79)
  7. மறுத்துரைத்தல்
    (எ. கா.) உள்ளதின் றென்று மாற்றலன் (கம்பரா. பள்ளியடை. 113)
  8. அழித்தல்
    (எ. கா.) புவிபடைத் தளித்து மாற்றி (கந்த பு. யுத்தகாண். ஏமகூ.1)
  9. ஓடுக்குதல் (W.)
  10. மறைத்தல்
    (எ. கா.) பூழிமாலை தள்ளருஞ் சுடர்கண் மாற்றி (கந்த பு. யுத்தகாண் ஏமகூ. 22)
  11. நாணயம் மாற்றுதல்
  12. பண்டமாற்றுதல்
  13. இருப்பிடம் வேறுபடுத்துதல்
    (எ. கா.) அவன் வீட்டை மாற்றிவிட்டான்
  14. ஒரிடத்துச் சமைத்த உணவை வேற்றிடத்துக்கு அனுப்புதல்
    (எ. கா.) Vaiṣṇ
  15. பெருக்கிச் சுத்தஞ் செய்தல்
    (எ. கா.) நுண்டுகளோடு சுண்ணமாற்றுதி (கந்த பு. அரசுசெய். 7) (W.)(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  16. இடைவிடுதல்
    (எ. கா.) மாற்றாதே பால் சொரியும் வள்ளற் பெரும்பசுக்கள் (திவ். திருப்பா. 21)
  17. ஒழிதல்
    (எ. கா.) வறந்தெற மாற்றியவானமும் (கலித். 146)
  18. தாமதித்தல் (W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To change, alter
  2. To rectify, convert, cure, set right
  3. To dispel, relieve, remove
  4. To derange, change or alter for the worse
  5. To repel, expel
  6. To hinder, prevent
  7. To deny, refuse
  8. To destroy; to cancel, repeal
  9. To cause involution, reduce the universe to its primitive elements
  10. To conceal, hide
  11. To change, as money
  12. To exchange, barter, traffic, trade
  13. To shift; to transfer, as from a place
  14. To send food from one place to another
  15. To sweep, cleanse, as a house
  16. To be interrupted
  17. To fail, as rains
  18. To detain



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாற்றுதல்&oldid=1994739" இலிருந்து மீள்விக்கப்பட்டது