முந்நீர்
(கோப்பு) |
முந்நீர்(பெ)
- ஆங்கிலம் - sea
- தெலுங்கு - కడలి, సముద్రము
- இந்தி - समुंदर
விளக்கம்
[தொகு]மூன்று வகையாக நீர் சேர்ந்து உருவானதால் முந்நீர் எனப்பட்டது. அவை: ஆற்று நீர், ஆறுகளிலிருந்து கடலில் சேரும் நீர்., ஊற்று நீர், இயற்கையாகவே கடலின் தரைப் பரப்பிலுள்ள ஊற்றுகளிலிருந்து சுரக்கும் நீர்., வேற்று நீர், மழை போன்ற இயற்கையின் மற்ற செயல்களால் கடலில் சேரும் நீர்.
[[பகுப்பு:பெயர்ச்சொற்கள்] முந்நீர் பொருள் விளக்கம்: புறநானூறு பாடலில் முந்நீர் என்ற சொல் வருகிறது. கரிகாலனின் முன்னோர் காலத்தில் நாவாய்கள் (படகுகள்) முந்நீரில் நிறுத்தப்பட்டிருந்தன என கூறப்பட்டுள்ளது. அதன்படி முந்நீர் என்பது நாவாயை செலுத்த தக்க மூன்று நீர்பரப்பை குறிக்கிறது. நீர்நிலைகள் நன்னீர் உப்புநீர் என இருவகைப்படும். கடல் உப்பு நீர் நிலையாகும். நன்னீர் நிலைகள் அசையும் (Loitic) நீர் நிலைகள் என்றும் அசையா (Lentic) நீர் நிலைகள் என்றும் இருவகைப்படும். ஆறு, சுனை, அருவி அசையும் நன்னீர் நிலைகள். குளம், குட்டை, ஏரி அசையா நன்னீர் நிலைகளாகும். எனவே முந்நீர் என்பது அசையும் நன்னீர் நிலை, அசையா நன்னீர் நிலை மற்றும் உப்பு நீர் நிலையை குறிக்கிறது.