உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:ஒலிப்புதவி-இந்தியமொழிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • தெள்ளிய முறை. IPAதான் பின்பற்ற வேண்டுமா?என்று பலமுறை நினைத்திருக்கிறேன். தமிழனுக்கு தமிழன் முறை. செம்முறை. ஒரு சின்ன இடமாற்றம் செய்தீர்கள் என்றால் சிறப்பாக இருக்கும். இதிலும் இலத்தீனிய எழுத்துக்கள் தான் முதலில் வரவேண்டுமா? ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள், ஆனால் ஒலி 50க்கும் மேல் என்று சொல்லப்படுவதை ஏற்கும் நாம், தமிழிலும் குறியீடு இல்லா ஒலிகள் உண்டு என்பதனையும் ஒப்புக்கொள்ள வேண்டுமென நினைக்கிறேன்.

இப்படியும் குறிப்பிடலாமென்று எண்ணுகிறேன்.

  1. கனிவு = க1
  2. காற்று = கா2
  3. வனம் = 3(எழுத்தில்லா இல்லா தமிழொலி)
  4. காந்தம் = கா4(எழுத்தில்லா இல்லா தமிழொலி)

இதனை இன்னும் வளர்த்தெடுக்க வேண்டும். என் தமிழ் ஆற்றலையும் வளர்த்தே வருகிறேன்.--த*உழவன் 01:01, 31 ஜூலை 2010 (UTC)

ஆங்கிலத்தில் 44 ஒலியன்கள் உள்ளன. அனைத்துலக ஒலியெழுத்து வரிசையில் (IPA) மொத்தம் 100+ ஒலியன்கள் உள்ளன. அனைத்துக்கும் எளிய தமிழ்க் குறியீடுகள் கொள்வது நமக்கு நல்லது. தமிழில் கனிவு, காற்று ஆகிய இரண்டுக்கும் ஒரே வல்லின ககரம்தான். கவனம் என்பதை gavanam என்று ஒலிப்பதாயின் க3வனம் என்று வரும். காந்தம் என்பது தமிழ்ச்சொல், அதில் வரும் கா தமிழ் வல்லினம் எனவே கா1ந்த3ம் என்று ஒலிக்கும் (தமிழ் எழுத்துகளின் ஒலிப்பு முற்றிலும் சீரானது. ஆகவே குறியீடுகள் தேவை இல்லை). காந்துதல் என்றால் வலித்தல் (அதாவது இழுத்தல்), ஆகவே காந்தம் (kaandham and NOT gaandham!!) என்றால் (இரும்பை) இழுப்பது, ஈர்ப்பது என்று பொருள். செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்றும் வலி வலி என்றால் இழு இழு என்று பொருள். உடலில் வலி என்னும் நோவுதலுக்கும், உள்ளே இழுப்பதால் அப்பெயர். தமிழில், தமிழ்ச்சொல்லாய் இருந்தால் முதலில் வரும் க எப்பொழுதும்1 மட்டும்தான். ஆனால் வேற்றுமொழிச்சொற்களில் ஒலிப்பு மாறும். எ.கா: கா3ந்தி4. --செல்வா 01:59, 31 ஜூலை 2010 (UTC)
தமிழில் எழுத்திலா ஒலிகள் பல்லி கொட்டும் சத்தம், வீளை என்னும் கழுகு இடும் ஒலி, முற்கம் என்னும் அரிமா முழக்கம் போன்றவையே. தமிழ்ச்சொற்களில் எழுத்திலா ஒலி ஏதும் இல்லை. எழுத்தொலிகள் சீரான முறையில் எழுத்துச்சூழலில் ஐயமற நிறுத்தப்படுவது. ஆனால் மிகச் சிறிய நுணுக்க வேறுபாடுகள் உண்டு. நீங்கள் மேலே காட்டியுள்ள கவனம் காந்தம் அப்படிப்பட்டதல்ல. அவற்றைத் தமிழில் ஒலிக்கும் பொழுது kavanam, kaandham என்றே ஒலித்தல் வேண்டும். அவையே சரியான ஒலிப்பு. அடுத்து, இலத்தீன் எழுத்துகள் முதலில் வரவேண்டும் என்றில்லை. இப்போதைக்கு இப்படி. --செல்வா 02:04, 31 ஜூலை 2010 (UTC)
  • அந்த 44 ஒலியன்களையும் கண்டேன். கற்பதற்கு.கற்றது கைமண் அளவு என்பதனை உணர்ந்தேன்.என்னுள் விதைத்ததற்கு நன்றி--த*உழவன் 02:28, 31 ஜூலை 2010 (UTC)
நல்ல தொடுப்பு. எத்தனை அழகாகச் செய்கிறார்கள்! நாம் எல்லோரும் கற்றுக்கொண்டேதான் இருக்கின்றோம். கற்றபடி நிற்கவேண்டும், ஆனால் கற்றல் நின்றுவிட்டால் மாந்தர் என்னும் உரிமை அற்றுவிடும் :)--செல்வா 02:47, 31 ஜூலை 2010 (UTC)
இவ்வாறு விக்சனரியிலும் சேர்க்க வேண்டும் அல்லவா ? --Inbamkumar86 06:53, 31 ஜூலை 2010 (UTC)
எதைச் சொல்கின்றீர்கள் என்று தெரியவில்லை. இந்த ஒலிப்புக் குறிகளையா? --செல்வா 14:22, 31 ஜூலை 2010 (UTC)

Start a discussion about வார்ப்புரு:ஒலிப்புதவி-இந்தியமொழிகள்

Start a discussion