வாழாவெட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வாழாவெட்டி எனப்படுவது கணவரால் கைவிடப்பட்ட அல்லது கணவர் உயிருடன் இருக்கும் போதும் அவருடன் சேர்ந்து வாழ்க்கை நடத்தாத ஒரு திருமணமான பெண்ணை குறிக்கும் சொல்லாகும்.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வாழாவெட்டி, பெயர்ச்சொல்.
  • (வாழ்+ஆneg+வெட்டி)
  1. கணவனோடு சேர்ந்து வாழப்பெறாதவள் (உள்ளூர் பயன்பாடு)
  • ஒரு திருமணமானப் பெண் அவளுடைய கணவனுடன் வசிப்பதே அவளின் வாழ்க்கை என்றும் அப்படி வாழாதவளின் சீவனம் வெட்டி என்றும் கருதப்படுகிறது,,,வெட்டி எனில் வீணான{து}, உபயோகமற்ற(து) என்றுப் பொருள்...எ.கா., வெட்டி வேலை, வெட்டிப் பேச்சு...ஆகவே, கணவனால் கைவிடப்பட்ட, கணவனுடன் வாழப்பிடிக்காமல் வீட்டைவிட்டு வெளியேறிய, மணமுறிவுப்பெற்றப் பெண்கள், கணவனுடன் இல்லறத்தில் ஈடுபடாமல் அவனுக்கு உபயோகமில்லாமல் இருப்பதால் வாழாத உபயோகமற்றப் பெண் என்னும் அர்த்தத்தில் வாழாவெட்டி என்றுக் குறிப்பிடப்படுகிறாள்..


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. married woman not living with her husband; grasswidow



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாழாவெட்டி&oldid=1912836" இலிருந்து மீள்விக்கப்பட்டது