சேர்
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
சேர்,பெயர்ச்சொல்
- நிறைக்கான ஒரு எடுத்தல் அளவை ஆகும்.
- விளக்கம் - எட்டு பலம் கொண்டது ஒரு சேர்; ஒரு வீசையில் ஐந்தில் ஒரு பங்கு (ஐந்து சேர் கொண்டது, ஒரு வீசை ஆகும்.)
- (இலக்கியப் பயன்பாடு)
.. இவைகளை ஒன்றாகச் சேர்த்துச் சூரணமாகச் செய்து கொண்டு, அதில் ஒரு வராகனெடை ஒரு சேர் நல்ல ஜலத்திற் போட்டு, அதனுடன் ஒரு சேர் பசுவின் பால் விட்டுக் கலந்து, அதிலுள்ள ஒரு சேர் ஜலமுஞ் சுண்டக் காய்ச்சி அந்தப் பாலில் நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிடல் வேண்டும். (நித்திய கரும விதி,வள்ளலார்)
- (இலக்கியப் பயன்பாடு)
- விளக்கம் - எட்டு பலம் கொண்டது ஒரு சேர்; ஒரு வீசையில் ஐந்தில் ஒரு பங்கு (ஐந்து சேர் கொண்டது, ஒரு வீசை ஆகும்.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- One of the old measurement practiced in TamilNadu
சேர், வினைச்சொல் .[தொகு]
- தனித்தனியாக இருப்பதை ஒன்றாக்கு.(எ. கா.) - பாலுடன், தேனை சேர்.
- இணை (எ. கா.) - பிரிந்த உறவுகள் சேர்ந்தன.
- கூட்டு (எ. கா.) - வீட்டின் செலவு கணக்கில், அந்த செலவையும் சேர்.
- தளைவார் - மாடுகளின் அல்லது விலங்குகளின் கால்களைக் கயிற்றால் பிணைத்தல்/ சேர்த்துக்கட்டுதலுக்கும் சேர் என்று பெயர்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
சேர்,(உரிச்சொல்).[தொகு]
- இலக்கணம் - "சேரே திரட்சி" - (தொல்காப்பியம் - 2-8-66)
- இலக்கிய வழக்கு - "சேர்ந்து செறி குறங்கு" - (நற்றிணை 170)
- வாக்கியம் - "பிரிந்து நடக்காமல், ஒன்றாக சேர்ந்து நட."
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
சொல்வளம்[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---சேர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி