விக்சனரி:தினம் ஒரு சொல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தினம் ஒரு சொல் திட்டம் விக்சனரியின் முதற் பக்கத்தில் நாள்தோறும் ஒரு சொல்லைக் காட்சிப்படுத்தும் திட்டமாகும்.

 • தமிழ் விக்சனரியில் உள்ள சொற்கள் மட்டும் முதற் பக்கத்தில் காட்சிப் படுத்தப்படும்; தமிழ் சொற்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்; பிற மொழிச்சொற்கள் தமிழில் விரிவான, பொருள், விளக்கங்களோடு இருந்தால் அவையும் காட்சி படுத்தப்படும். அதிக பட்சமாக இருபது தமிழ்ச்சொற்களுக்கு ஒரு அயல்மொழிச் சொல் வீதம் காட்சிப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
 • இதற்கு முன் இடம்பெற்ற சொற்களைக் காண இங்கு செல்லவும்

இன்றைய தினம் ஒரு சொல்[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 4
ஞெகிழி (பெ)
நெகிழிப் பொருட்கள்
Et baal.jpg

பொருள்

 1. நெகிழி
  நெகிழிப் பைகளை உண்பதால், பல உயிரினங்கள் அழிகின்றன.
 2. கொள்ளி; கடைக்கொள்ளி
 3. தீக்கடை கோல்
 4. தீ, தீப்பொறி
  விடுபொறி ஞெகிழியிற் கொடிபடமின்னி (அகநானூறு. 108).
 5. விறகு
 6. கொடுவேலி
 7. சிலம்பு

மொழிபெயர்ப்பு

 • ஆங்கிலம்
 1. plastic
 2. fire-brand
 3. piece of wood used for kindling fire by friction
 4. fire, spark
 5. fuel
 6. ceylon leadwort
 7. tinkling anklet
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக