விக்சனரி பின்னிணைப்பு:மொழியியல் கலைச் சொற்கள் (தமிழ் - ஆங்கிலம்)

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழில் கல்வி ஓரளவுக்காவது பயிலப்பட்டுவரும் இடங்களில் தமிழ்நாடும், இலங்கையும் முக்கியமானவை. எனினும் பல்வேறு பாடங்கள் சம்பந்தமான கலைச் சொற்கள் வெவ்வேறாக இவ்விரு இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் இவ்விரு நாடுகளிலும் பயன்பாட்டிலுள்ள சொற்களும் தனித்தனியாகக் கீழே சேர்க்கப்பட்டுள்ளன. "பயன்படும் இடங்கள்" என்பதன் கீழ்த் தரப்பட்டுள்ள இல என்பது இலங்கையில் பயன்படுத்தப்படும் சொல் என்பதையும், தநா என்பது தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுவது என்பதையும் குறிக்கும்.

தமிழ் ஆங்கிலம் பயன்படும் இடம்
உளவியல்சார் மொழியியல் psycholinguistics தநா
எழுத்துப் பெயர்த்தல் transliteration தநா
எழுத்து மொழி written language தநா, இல
ஒலி பெயர்த்தல் transcription தநா
ஒலியன் phoneme தநா
ஒலியன் எழுத்து phonemic writting,
alphabetic writting
தநா
கிளை மொழி dialects தநா
வட்டார வழக்கு dialects தநா
பேச்சு மொழி Spoken language இல, தநா
மொழி Language இல, தநா
மொழிக் குடும்பம் Family of languages இல, தநா
மொழி பெயர்த்தல் translation தநா
மொழி Language இல, தநா