வீடணன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

வீடணன்:
இராமனிடம் சரணடையும் காட்சி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்---विभीषण---விபீ4ஷண--வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • வீடணன், பெயர்ச்சொல்.
  1. விபீஷணன்--இராவணன் தம்பி
    (எ. கா.) நின்மி னென்றனன் வீடண னீதியான் (கம்பரா. பிணிவீ. 110).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a brother of ravana

விளக்கம்[தொகு]

  • இராமபிரானின் பத்தினி சீதையைக் கடத்திவந்த அண்ணன் இராவணின் அடாத செய்கையைக் கண்டித்த அவனுடைய தம்பி விபீஷணன் என்னும் வீடணன், சீதையை மீண்டும் இராமனிடமே அனுப்பிவைக்குமாறு தான் செய்த அறிவுரையை ஏற்கமறுத்ததால் இராவணனைவிட்டுப் பிரிந்து இராமனிடம் சரண் புகுகிறார்...இராவணனோடு நடந்த சமரில் இராமனுக்கு உறுதுணையாய் நின்று இராவணனை வதம் செய்ய இராமனுக்கு உபாயமும் சொல்லித்தருகிறார்...பின்னர் போரில் இராமன் வெற்றிக்கொண்டபின், இலங்கைக்கு அரசனாக இராமனால் முடிசூட்டப்படுகிறார்...திருமாலின் அவதாரமாகிய இராமபிரானிடம் வீடணன் கொண்ட ஆழ்ந்த பக்தி, ஈடுபாட்டினால் ஸ்ரீவைஷ்ணவர்களால் விபீஷணாழ்வார் என்றே சிறப்பித்துக் கொண்டாடப்படுகிறார்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வீடணன்&oldid=1394567" இலிருந்து மீள்விக்கப்பட்டது