தம்பி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தம்பி(பெ)
- வயதில் இளைய உடன் பிறந்தவன் மேற்கோள்கள் ▼
- இளம் வயதினனை கனிவுடன் அழைக்கப் பயன்படும் சொல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்: younger brother
- நிப்பான் மொழி: おとうと
- பிரான்சியம் : petit frère
பயன்பாடு
- தம்பி உடையான் படைக்கு அஞ்சான்
விளக்கம்
- தம்+ஐயன் - தமக்கு மூத்தவன் - தமையன் (அண்ணன்)
- தம்+அக்கை = தமக்கை - தமக்கு மூத்தவள் - அக்கா
- தம்+பின் = தம்பி எனத் திரிந்தது. தம்பின் பிறந்தவன் - தம்பி
- தம்+கை = தங்கை - தமக்குச் சிறியவள் - தங்கை (கை எனும் சொல் சிறிய எனும் பொருளில் வந்தது.) (மொழிப் பயிற்சி - 21: பிழையின்றித் தமிழ் பேசுவோம் - எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 2 சன 2011)
- பின்னோன்