இராவணன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்---रावण--ராவண-- வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- இராவணன், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- god as being without form
- ravana, king of Laṅkā and chief of the Raksasas, whose destruction by Rama forms the subject of the Ramayana, an indian epic...
விளக்கம்
[தொகு]- உருவம் ஒன்றுமில்லாத/அருவமான இறைவனை இராவணன் என்பர்...இது ஒரு பொருள்...
- வால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட இராமாயணம் என்னும் இதிகாசத்தின் முக்கிய எதிர்மறைப் பாத்திரம் இராவணன்...இலங்கையின் அரக்கர் குலத்து அரசனான இவன் இராமபிரானின் பத்தினியான சீதையைக் கவர்ந்துச் சென்றதால் ஏற்பட்டப் போரில் இராமனால் கொல்லப்பட்டு அழிவுற்றான்...பத்து தலைகளும், இருபது கைகளும் கொண்டவனாகச் சித்தரிக்கப்படுகிறான்...இதுவுமன்றி பெரும் அறிவாற்றலுடையவனாக, மாபெரும் வீரனாக, வேத விற்பன்னனாக, இசை அறிஞனாக, தவ வலிமை பெற்றவனாக, சிறந்த சிவ பக்தனாக இந்து புராண, இதிகாசங்களில் வருணிக்கப்படுகிறான்...இன்றும் இவனைப்போற்றும் மக்களும், இவனுடைய வம்சாவழியினர் எனக்கூறிக்கொள்ளும் பழங்குடி மக்களும் பாரதத்தில் இருக்கின்றனர்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +