வெள்ளம்
Appearance
வெள்ளம் (பெ)
பொருள்
- நீர்ப்பெருக்கு - நிலத்தை மூழ்கடிக்குமளவுக்குத் தேங்கி நிற்கும் அல்லது பொங்கிப் பாய்ந்தோடும் நீர்
- கடல்
- கடலலை
- நீர்
- ஈரம்
- மிகுதி
- ஒரு பேரெண்
- உண்மை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
- காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகள் மூழ்கின
- வெள்ளம் வந்து மோதும்போது கரைக்குச் சேதம் உண்டாகாமலிருக்கும் பொருட்டு அந்தப் படுகையில் கருவேல மரங்களையும் விளாமரங்களையும் நட்டு வளர்த்திருந்தார்கள். (பொன்னியின் செல்வன் , கல்கி)
- கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போய்விடாது (பழமொழி)
- தலைக்கு மேலே வெள்ளம் போனால், சாண் என்ன,முழம் என்ன? (பழமொழி)
- குடிக்க வெள்ளம் கொண்டுவா - bring some water to drink.
- இது கள்ளமா வெள்ளமா? (இது பொய்யா, உண்மையா?) - Is it true or false?
(இலக்கியப் பயன்பாடு)
சொல்வளம்
[தொகு]- பிரளயம்
- பெருவாரி
- மக்கள் வெள்ளம், மகிழ்ச்சி வெள்ளம், இன்ப வெள்ளம்
- வெல்லம்