తోమాల
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: தோ1மால
சொற்பிறப்பு:
- தமிழ்-தொடுத்தமாலை-
பொருள்
[தொகு]- తోమాల, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- திருமலை வெங்கடேசப் பெருமாளுக்குச் செய்யப்படும் சேவைகளில் ஒன்று தோமால சேவ..இது தமிழ்ச்சொல்லான தொடுத்தமாலை என்பதின் தெலுங்கு ஆக்கம்...மிக முக்கியமான இச்சேவையில் திருமஞ்சனம்,தமிழ் நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாராயணம்,மலர் அலங்காரம் மற்ற பிற பூசைகள் அடக்கம்... மூலவருக்கு அணிவித்த தங்க கவசங்களுக்கும், போக ஸ்ரீநிவாசருக்கும் அபிஷேகம் மந்திர உச்சரிப்புகளோடு நடத்தப்படுகிறது...பின்னர் பெருமாளை அநேக வித,விதமான மலர் மலைகளால் அலங்கரிப்பர்.. இம்மாலைகள் தோமால எனப்படுகின்றன..திருமலையில் மலர்கள் அனைத்தும் ஏழுமலையானுக்கே சொந்தம்..பக்தைகள் மற்றும் பொதுமக்கள் பூக்களைப் பயன்படுத்த அநுமதி இல்லை.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---తోమాల--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +