உள்ளடக்கத்துக்குச் செல்

ನವಿಲು

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கன்னடம்

[தொகு]
ನವಿಲು:
நவிலு--மயில்
இல்லை
(கோப்பு)


பொருள்

[தொகு]
  • ನವಿಲು, பெயர்ச்சொல்.
  1. மயில்

விளக்கம்

[தொகு]
  • மயில் இந்தியாவின் தேசியப்பறவை ஆகும்...மேக மூட்டத்தைக் கண்டாலே, தன் அழகிய நீண்ட சிறகுகளை விரித்து ,மிக எழிலானத் தோற்றத்தில், ஆடத்துவங்கிவிடும் ஒரு பெரிய பறவையினம்...ஆண் மயில்களுக்கு மட்டுமே ஆடுவதற்கேற்ற நீண்ட அழகிய சிறகுகளுண்டு ...தமிழ்க் கடவுள் முருகனின் வாகனம் மயில்...இறைவன் கண்ணனின் தலையலங்காரமும் மயிற்தோகையாலானதே! தமிழிலக்கியங்களில் வெகுவாகப் பேசப்படும் பறவை மயில்...பாம்புகள், பல்லிகளுக்கு இந்தப்பறவை பரம வைரி...ஆண்மயில் பெண்மயிலை கவர்வதற்காகவும் தோகையை விரித்து ஆடும்... ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை... தோகையில் வரிசையாகக் 'கண்' வடிவங்கள் உள்ளன... தோகையை விரிக்கும் போது இவை மிகவும் அழகாகத் தோற்றமளிக்கின்றன...வெண்ணிறமுள்ள மயில்களுமுண்டு... பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும், பளபளப்புக் கொண்ட நீலமும், பச்சை கலந்த சாம்பல் நிறமும் கலந்தது...நீண்டதூரம் பறக்க இயலாத மயில்கள் உயரமான மரங்கள் போன்றவற்றில் ஏறி அமர்ந்துக் கொள்ளும்...மயிலின் இறைச்சி மருத்துவகுணமுள்ளதெனக் கருதப்பட்டது...மயிலிலிருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெய் உடற்வலிகளைப்போக்குமென சொல்வர்...மயிலின் இறகுகளைக்கொண்டு அழகுப்பொருகளைத்தயாரிப்பர்... இக்காரணங்களால் வெகுவாக வேட்டையாடப்பட்டு, இந்தப்பறவையினமே இந்தியாவில் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டது....தற்போது மயில்களை வேட்டையாடுவது சட்டபடி குற்றம்...




( மொழிகள் )

ஆதாரங்கள் ---ನವಿಲು--- கன்னட விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ನವಿಲು&oldid=1638185" இலிருந்து மீள்விக்கப்பட்டது