உள்ளடக்கத்துக்குச் செல்

microphone

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(கோப்பு)


பெயர்ச்சொல்

[தொகு]

microphone

  1. ஓரி (தமிழ்ச்சொல்)
  2. ஒலியேற்றி
  3. ஒலிவாங்கி

விளக்கம்

[தொகு]
  • ஓர்தல் என்பதற்கு பிற பொருள்களுடன், கேட்டல் என்று பொருள் சொல்கிறது திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத் தமிழ் அகராதி. “ஓர்தல்” என்றால் அறிதல் என்றும் பொருள். “புலரி விடியல் புள் ஓர்த்துக் கழிமின்....” என்று மலைபடு கடாம் சொல்கிறது (பாடல் வரி: 448) இதன் பொருள் பறவை ஒலியைக் “கேட்டு” என்பதல்லவோ ? புறத்தில் தோன்றும் ஒலியைக் கேட்டு அல்லது உள்வாங்கி ஆம்ளிபையருக்கு அனுப்பி, ஒலியின் அளவைப் பெருக்கி ஸ்பீக்கர் வழியாக வெளியிடச் செய்கிறது ஓரி என்னும் மைக். ஆகையால் “ஓர்தல்” செய்யும் microphone கருவியைத் தமிழில் ஓரி என்று சொல்கிறோம்.ஆதாரம்: தமிழ்ப் பணி மன்றம் வலைப்பூ.

இலக்கியமை

[தொகு]
  • “பாடல் ஓர்த்தும் நாடகம் நயந்தும்....”என்கிறது பட்டினப் பாலை (பாடல் வரி :113) (ஓர்த்தல் = உள்வாங்குதல், கேட்டல்)
  • ”குரல் ஓர்த்துத் தொடுத்த சுகிர் புரி நரம்பின்...” என்று பேசுகிறது மலைபடு கடாம்  ! (பாடல் வரி : 23)
  • “புலரி விடியல் புள் ஓர்த்துக் கழிமின்....” மலைபடு கடாம் இன்னொரு இடத்தில் சொல்கிறது (பாடல் வரி: 448)
  • ”இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள்....” என்பது திருக்குறள் (357)


==வெளியிணைப்பு== https://puthiyachol.blogspot.com/2021/12/sol-04.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=microphone&oldid=1990415" இலிருந்து மீள்விக்கப்பட்டது