puffed rice
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- puffed rice, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- அரிசிப்பொரி அல்லது முட்டைப்பொரி என்பது அரிசியைப் பொரித்துச் செய்யப்படும் ஓர் உணவுப் பொருள்...எளிதில் செரிமானம் ஆகக்கூடிய இந்தப்பொரியைக்கொண்டு பலவிதமான உணவுப்பொருட்களையும் தயாரிப்பர்...வெல்லப் பாகிலிட்டு உருண்டைப் பிடிப்பர்...சர்க்கரைப் பாகில் தோய்த்து இனிப்புப் பொரியாக்குவர்...இலேசாக மீண்டும் சிறிது எண்ணெயில் வறுத்து உப்பு, காரப்பொடிச் சேர்த்து இடைவேளை உணவாக உண்பர்...சிறுவர்கள் எந்தவிதமான பக்குவமும் இல்லாமல் இந்தப்பொரி கிடைக்கும் நிலையிலேயே சாப்பிடுவிடுவார்கள்...வட இந்தியாவில் சாட் என்னும் உணவு வகையாகத் தயாரிக்கப்பட்டு பெரிதும் விரும்பி உண்ணப்படுகிறது... தற்காலத்தில் வியாபார நோக்கில் இன்னும் பற்பலவிதமான அரிசிப்பொரி உணவுகள் அங்காடிகளில் கிடைக்கின்றன...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---puffed rice--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு