கடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கடம் (பெ)

  1. கருநாடக இசையுடன் தொடர்புடைய தென்னிந்தியத் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்று
  2. குடமுழவு
  3. குடம்
  4. கடன்
  5. தெய்வக்கடன்
  6. முறைமை
  7. நீதி
  8. கடன்
  9. பாவம்
  10. காடு
  11. கோபம்
  12. யானைக் கதுப்பு
  13. யானை மதம்
  14. யானைக் கூட்டம்
  15. கயிறு
  16. மயானம்
  17. பாலைநிலத்துவழி
  18. நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று
  19. கும்பராசி
  20. பதக்கு
  21. உடம்பு
  22. மலைச்சாரல்
  23. மர மஞ்சள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a pot-like musical instrument used in Indian Carnatic music
  2. hand drum played on both ends
  3. waterpot vessel
  4. debt
  5. homage due to God; religious obligations
  6. duty, proper conduct
  7. right, justice
  8. கடன்
  9. sin
  10. forest
  11. anger
  12. elephant's temples, from which a secretion flows
  13. rut flow of a must elephant
  14. troop of elephants
  15. rope
  16. burning ground
  17. hard, difficult path in barren tract
  18. name of Upaniṣad
  19. sign of Aquarius in the Zodiac
  20. dry measure = 2 kuṟuṇi
  21. body human or other
  22. mountain side
  23. tree turmeric
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கடமுண்டுவா ழாமை (இனி. நாற். 11)
  • கடமுண்டார் கல்லாதவர் (திவ். இயற். 4, 52)
  • கடத்திடைக் கணவனை யிழந்த (பு. வெ. 10, சிறப்பி. 1)
  • கடக்களிறு (திருவாச. 3, 155)
  • கடம்பலகிடந்த காடு டன்கழிந்து (சிலப். 11, 90)
  • மலயந்தன்னிற் கடமுனிசேறலோடு (கந்த பு. திருக்கல். 65)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :குடம் - பானை - செம்பு - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடம்&oldid=1241868" இலிருந்து மீள்விக்கப்பட்டது