பேச்சு:தொன்னை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • இதுபற்றி நான் படங்கள் போன வருடம் எடுத்துள்ளேன். அதன் முழுஅழகையும் gif animation மூலம் உருவாக்க நினைத்து எடுத்தேன். நோக்கியோ செல்லிடப்பேசியில் எடுத்ததால் சரியாக வரவில்லை. அதிக நேரம் கணினியியல் உட்கார இயலவில்லை. வியர்வையும், உக்கிரமும் தாங்க முடியவில்லை. சோர்வாகி விடுகிறேன்.

விரைவில் இணைக்கிறேன். இணைத்தவுடன் தங்களுக்குத் தெரிவிக்கிறேன். தமிழனின் உயரிய கலாச்சாரத்திற்கு தொன்னையும் ஒரு சான்றல்லவா? மறந்ததை நினைவு படுத்தியமைக்கு மிக்க நன்றி.த*உழவன் 07:04, 11 மே 2010 (UTC)[பதிலளி]

  • நான் சிறுவனாக இருந்தபோது அம்மா தோட்டத்துக்குக் கொண்டுவரும் உணவைப் பனங்'கோட்டை'யில் வைத்துப் பலமுறை சாப்பிட்டிருக்கிறேன். அங்கே கோட்டை என்றுதான் சொல்லுவார்கள். கோப்பை மருவி அப்படி ஆகியுள்ளது என நான் உணர்ந்தபோது, பல பத்தாண்டுகள் ஓடியிருந்தன; அங்கே 'கோட்டை' இல்லை; நானில்லை; கூட அம்மா அப்பாவும் இல்லை. காலச்சக்கரத்தின் வேகந்தான் என்ன? பழ.கந்தசாமி 07:14, 11 மே 2010 (UTC)[பதிலளி]
  • பல நேரங்களில் எனது நிலை எண்ணி வருந்துவதுண்டு. எது இல்லாவிட்டாலென்ன, அம்மா அப்பாவுக்கு அருகிலேயே இருக்கிறார்கள் என மகிழ்வேன். உங்களின் பெற்றோர் பற்றிய தேடல், என் கண்களை அதிக ஈரம் செய்து விட்டது.
கனவு காணும் வாழ்க்கை
யாவும்
கலைந்து போகும் மேகங்கள்

-த*உழவன் 07:25, 11 மே 2010 (UTC)[பதிலளி]

  • மீண்டும் பார்ப்போம். வருகிறேன். வணக்கம்.த*உழவன் 07:30, 11 மே 2010 (UTC)[பதிலளி]
  • என்னிடமுள்ள படங்களை வைத்து gimpஇல் சில மாற்றங்கள் செய்து உருவாக்கியது. நான் நினைத்தபடி வரவில்லை. எனினும், இப்போதை!க்கு இப்படம், இல்லை என்பதை இல்லயென்றாக்குகிறது.(த*உழவன் 14:29, 8 ஜூன் 2010 (UTC))
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:தொன்னை&oldid=660698" இலிருந்து மீள்விக்கப்பட்டது