பேச்சு:அக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உங்களது புது முயற்சி வரவேற்கத் தக்கது. அது பற்றிய எனது கருத்துக்கள் வருமாறு;-

  • நீங்கள் வின்சுலோ தளத்தின் தகவல்களை, ஆதாரமாகக் கொண்டுள்ளீர்கள். பிற பொருள்களையும் சேர்த்து இருக்கலாம். உங்களின் தகவலாதாரங்களை தயவுசெயது வெளிப்படுத்தவும்.
  • உங்களின் கருத்துக்களை, அந்தந்தப் பக்கத்தின் மேலுள்ள 'உரையாடல்' பகுதியில் தெரியப்படுத்தி, தெளிவுப் படுத்துங்கள். அல்லது, அப்பகுதியில் கூறப்பட்ட கருத்துக்களை கவனியுங்கள்.
  • அனைத்து ஆங்கில எழுத்துக்களையும், சிறிய எழுத்துக்களில் எழுதுமாறு, இத்தள நிர்வாகிகள் கூறியிருப்பதை மறக்காதீர். நீங்கள் எழுதியுள்ள ஆங்கில சொல்லான Grain என்பதனை grain என மாற்றி, அதன் மூலம் ஏற்படும் பலன்களை அறியவும்.
  • 'அக்கம்' என்ற சொல்லின், பொருள் பகுதியில் கடைசியாக 'பக்கம்' என்ற சொல் உள்ளது. அது அங்கு இருந்தால், தவறான பொருளைத் தரும். அது 'இவற்றையும் பார்க்க' எனும் பகுதியில் மட்டும் இருப்பது நலம்.'இவற்றையும் பார்க்க' என்புதனை 'ஒப்பிட்டறிக'என்று மாற்றினால் நன்றாக இருக்குமே!
  • 'விளக்கப்படம்' என்பது தேவையானதா? அதற்குள் எப்படி படங்களைப் பயன்படுத்துவது? சிறிய இடமாக இருக்கிறதே?
  • 'அவன் அக்கம் பக்கம் பார்த்துப் பேசினான்' என்பதன் மாற்றங்களை உணரவும்.
பல பொருள்களைத் தரக் கூடிய தமிழ் சொற்களை உருவாக்கும் போது, அட்டவணைப் பயன்பாடு சிறப்பாகத்தான் படுகிறது. அது பற்றி நானும் எண்ணுகிறேன். உங்களது ஆர்வச் செயல், என் ஆர்வத்தினையும் தூண்டுகிறது.
நமது புது முயற்சிகளோடு, இதுவரைப் பின்பற்றியுள்ள அகரமுதலி வழமைகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து. நன்றி! (தகவலுழவன் 16:55, 11 ஜனவரி 2009 (UTC))
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:அக்கம்&oldid=194811" இலிருந்து மீள்விக்கப்பட்டது