பேச்சு:மத்தகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அட்டவனை முறை சரியான வழி அல்ல. ஏன் ஆங்கிலத்தில் மட்டும் பொருள் தர வேண்டும்? மேலும் இது தமிழ்வழி தரும் பொருளை மட்டுப்படுத்துவதாக உள்ளது (கவனத்தை சிதற அடிக்கின்றது). பார்ப்பதற்கும் நன்றாக இல்லை. பல பொருள்களுக்கூ பன்மொழி பெயர்ப்புகளை ஆங்கிலத்தில் எப்படித் தருகின்றார்கள் என்று பாருங்கள். --செல்வா 01:43, 9 மே 2010 (UTC)[பதிலளி]

யானையின் கும்பத்தலம் என்பது யானையின் நெற்றியில் புடைத்து இருக்கும் ப்குதி என்று எழுதி புரிந்துகொள்வதற்கு மாறாக, ஆங்கிலவழி தமிழின் பொருள் என்ன என்று புரிந்துகொள்ளுமாறு எழுதுதல் தமிழ்வழி பொருள் கொள்ள வேண்டும் என்னும் கருத்துக்கு மாறானது. --செல்வா 03:16, 9 மே 2010 (UTC)[பதிலளி]
த*உழவன், உங்களுக்கு எப்படிச் சொல்லி விளங்க வைப்பது என்றே எனக்குத் தெரியவில்லை. அருள்கூர்ந்து இப்படியான அட்டவணைகளை இட வேண்டாம் என வேண்டிக்கொள்கிறேன். ஏன் மொழிபெயர்ப்புக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கின்றீர்கள்?!! இப்பொழுது இருக்கும் வடிவமைப்பு நன்ன்றாக இல்லை ஐயா!!! இது மிகவும் நேர்மையான கருத்து. இப்படி மீண்டும் மீண்டும் சொல்ல நேர்வதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். எளிமையாக சொற்பொருள்களை எண்ணிக்கையிட்டுத் தருதல் அழகாகவே இருந்தன. வடிவமைப்பு என்பது மிகவும் முக்கியம். பலவும் அடர்ந்து இருப்பதும், சீர்குன்றியும் இருப்பது அழகாக இராது. ஆங்கிலத்திலே cluttered என்பார்களே,, அது போல இருத்தல் அழகல்ல. இவற்றை எல்லாம் கூற நேர்வதற்கு வருத்தமாக உள்ளது. --செல்வா 06:32, 10 மே 2010 (UTC)[பதிலளி]
  • இம்முறையின் மூலம் பிழைகள் தோன்ற அதிக வாய்ப்புகள் உண்டு, என்பதனை செய்து பார்த்து புரிந்து கொண்டேன். இது ஒரு சோதனை முயற்சி. அவ்வளவே.

நீங்கள் பயன்படுத்தியப் பெட்டி வடிவம் சிறந்ததே. இருப்பினும், அது ஆங்கில விக்சனரியிலிருந்து வேறுபடுகிறதே. அது ஏன்? அதே வசதிகள் இங்கு கொணர என்ன செய்ய வேண்டும்.? முன்பு காட்டு /மறை வசதிகள் இருந்தன. அதனை தெரன்சு காலத்தில் நீக்கப்பட்டது ஏன் என்று புரியவில்லை. அதனை நீங்கள் சரிசெய்து தர இயலுமா? த*உழவன் 06:56, 10 மே 2010 (UTC)[பதிலளி]

  • மூன்று வருட இடைவெளிக்குப்பிறகு இந்த அட்டவணையை மேம்படுத்த. அட்டி வார்ப்புருவை கையாளலாம் என்று எண்ணினேன். இதில் படம் இட்டாலும், அடுத்து வரும் மொழிபெயர்ப்பு பகுதி அதற்கு ஏற்றாற் போல விரிவடையவில்லை.எனவே, அட்டிமுறை படமில்லா, ஒரிரு சொற்களை உள்ளடக்கக் கூடிய சொற்களை அட்டவணை படுத்தவே பயன்படுகிறது. தற்போதுள்ள விக்கி அட்டவணை முறையில். நமது பின்னிணைப்புகள் போன்ற பெரிய பட்டியல்களை மாற்றுதல் என்பது மிகக் கடினமாக இருக்கிறது. ஆனால், அட்டி வார்ப்புருவில் ஒரு சொல்லுக்குரியவற்றை மாற்றுதலும் எளிது. அதனை வரிசை மாற்றி போட்டாலும் அட்டவணை தோற்றம் மாறாது. எல்லா வற்றிற்கும் மேலாக இரண்டுமே அட்டவணையாகவே தோன்றுகிறது. இம்முறையிலும் கூட, ஒரு சொல்லுக்குரிய படம், மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றை உள்ளிடுதல் எளிமையாக இல்லை. படிப்பவருக்கு வசதியாக இருக்கும். தொகுப்பவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது. எனவே, இச்சோதனைபக்கம் பேணப்படுகிறது. மற்ற அட்டவணை வாரப்புருக்கள் நீக்கப்படுகின்றன.--தகவலுழவன் (பேச்சு) 01:30, 26 மார்ச் 2014 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:மத்தகம்&oldid=1228653" இலிருந்து மீள்விக்கப்பட்டது