அகத்திணை நூல்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்.
  1. ஐந்திணை ஐம்பது
  2. திணைமொழி ஐம்பது
  3. ஐந்திணை எழுபது
  4. திணைமாலை நூற்றைம்பது
  5. கைந்நிலை
  6. கார் நாற்பது
தொடர்புடையவை
தகவலாதாரம்
  • கழக தமிழ் அகராதி நூல்
  • க்ரியாவின் தற்கால தமிழகாரதி நூல்.
மொழிபெயர்ப்புகள்
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

சங்க இலக்கியங்களில் அகத்திணை நூல்கள்[தொகு]

சங்க இலக்கியம் என்று அறிஞர்களால் தொகுக்கப்பட்ட நூல்கள் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஆகும். இவற்றுள் எட்டுத்தொகைத் தொகுப்பில் உள்ள அகநானூறு, ஐங்குறு நூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை ஆகிய ஐந்து நூல்களும் அகத்திணை நூல்கள். பத்துப்பாட்டுத் தொகுக்கிலுள்ள குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு ஆகிய இரண்டு நூல்களும் அகத்தினை நூல்கள். இத் தொகுப்பில் உள்ள நெடுநல்வாடை, பட்டினப்பாலை ஆகிய இரு நூல்களையும்கூட அகத்திணை நூல்கள் என்று அறிஞர்கள் சிலர் எடுத்துக்கொள்கின்றனர். எந்த வகையில் அவை அகத்திணை நூல்களாகக் கொள்ளப்படுகின்றன என்பதை அந்தந்த நூல்கள் பற்றிய விளக்கங்களில் காணலாம்.

பத்துப்பாட்டுத் தொகுப்பில் அகத்திணை நூல்கள்[தொகு]

குறிஞ்சிப்பாட்டு[தொகு]

ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவிப்பதற்காகக் கபிலர் பெருமானால் பாடப்பெற்றது.261 அடிகளை உடையது.ஆசிரியப்பாவால் ஆனது.தலைவியின் பொருட்டு தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்பதாக அழகுற விளக்கப்பட்டுள்ளது.காந்நள் மலர் முதல் மலை எருக்கு ஈறாக 99 வகை மலர்கள் இதில் குறிக்கப்பட்டுள்ளன.

முல்லைப்பாட்டு[தொகு]

103 அடிகள் கொண்ட இந்தப் பாடலைப் பாடியவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார். முல்லைத் திணையின் உரிப்பொருள் இருத்தலும் இருத்தல் நிமித்தமும். தலைவன் வருகையை எதிர்நோக்கிக்கொண்டு தலைவி காத்திருத்தல் பற்றிக் கூறுவது முல்லைத்திணை. தலைவன் பாசறையில் இருக்கிறான். தலைவி காத்திருக்கிறாள். மழை பொழிந்த மாலைக் காலத்தில் பெருமுது பெண்டிர் நாழியில் நெல்லும், அதன்மேல் முல்லைப்பூக் குவியலும் வைத்து, அலரிப் பூக்களைத் தூவி விரிச்சிக்காக (சகுனத்திற்காகக் காத்திருக்கின்றனர். தாய்ப்பசுவின் வரவுக்காகக் காத்திருக்கும் கன்றைப் பார்த்து ஒருத்தி 'இன்னே வருகுவர் தாயர்' என்று சொல்லிக் கன்றைத் தடவிக் கொடுக்கிறாள். இச் சொல்லை விரிச்சியாக எடுத்துக்காட்டிப் பாசறையிலுள்ள தலைவன் விரைவில் வருவான் என்று பெருமுது பெண்டிர் தலைவியைத் தேற்றுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

எட்டுத்தொகை நூல்களில் அகத்திணைத் தொகுப்பு நூல்கள்[தொகு]

== ஐங்குறு[தொகு]

கலித்தொகை[தொகு]

குறுந்தொகை[தொகு]

நற்றிணை[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகத்திணை_நூல்கள்&oldid=1972574" இலிருந்து மீள்விக்கப்பட்டது