வீமன் வாழைக்காய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

வீமன் வாழைக்காய்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வீமன் வாழைக்காய், பெயர்ச்சொல்.
  • (வீமன்+வாழை+காய்)
  1. ஒரு வகை வாழைக்காய்
  • இந்தியா அசாம் மற்றும் வடகிழக்குப் பகுதியில் காணப்படும் ஒருவகை வாழை இனம்..இதன் காய்கள் உருண்டுத் திரண்டு பருமனாக யிருக்கும்...காய்/பழத்தின் உள்ளே சிறு சிறு விதைகள் உண்டு...விதைகள் உண்ணத் தக்கவையல்ல...பஞ்சபாண்டவர்களில் ஒருவனான பீமனை உருவத்தில் ஒத்து இருப்பதால் வீமன் வாழை என்ற பெயரைப் பெற்றது...இது ஒரு சுவையான வாழை வகை...வீமன் வாழை மிகுந்து ஊட்டச் சத்துக்கள் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோரின் உணவாகத் திகழ்கிறது...வீமன் வாழையின் தண்டும் பிரபலமான ஓர் உணவுப்பொருள்...மருத்துவ குணம் உள்ள இந்த வாழை உறக்கமின்மை, வயிற்றுப்போக்கு, இரவில் விந்து வெளிப்படுதல் போன்றப் பிணிகளைப் போக்க வல்லது..முறையாகத் தொடர்ந்து உண்டால் உடலுக்கு மிகுந்த வலிவைத் தரும்...

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a kind of banana found in the north east india, called Bhim banana


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வீமன்_வாழைக்காய்&oldid=1416004" இலிருந்து மீள்விக்கப்பட்டது