வாழை
வாழை(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- ஒரு வகைப் பழ மரம்
- அதனுடைய பழம்.
- இலை,காய்,தண்டு அனைத்தும் பயனுள்ளவை.
- வாழைப்பழங்கள் தமிழ் கடவுள் வழிபாட்டிற்குப் பயன்படுகிறது.
அறிவியல் பெயர்
[தொகு]- Musa paradisica linn
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
(இலக்கணப் பயன்பாடு)
- தமிழிலக்கணப்படி, இச்சொல், ஒருபொருட்பன்மொழி ஆகும்.
(இலக்கியப் பயன்பாடு)
- மால்வரை யொழுகிய வாழை (தொல்காப்பியம் சொல். 317, உரை).
- செழுங்கோள் வாழை (புறநானூறு 168, 13)
- கோழிலை வாழை (அகநானூறு 2).
- குலைவாழை பழுத்த (சீவக சிந்தாமணி. 1191).
- ததையிலே வாழை (ஐங்குறுநூறு. 460)
( மொழிகள் ) |
சான்றுகள் ---வாழை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
David W. McAlpin என்பவரின் கருவ அகரமுதலி
(முக்கனி) - (அசோகம்) - (அசோணம்) - (அற்பருத்தம்) - (அம்பணம்) - (கவர்) (சேகிலி) - (அரம்பை) - (கதலி) - (கோள்) (வீரை) - (வான்பயிர்) - (ஓசை) - (அரேசிகம்) - (கதலம்) - (காட்டிலம்) - (சமி) - (தென்னி) - (நத்தம்) - (மஞ்சிபலை)(மிருத்தியுபலை) - (பானுபலை) - (பிச்சை) - (புட்பம்) - (நீர்வாகை) - (நீர்வாழை) - (மட்டம்) - (முண்டகம்) - (மோசம்) - (வங்காளி) (வல்லம்) - (வனலட்சுமி) - (விசாலம்) - (விலாசம்) - (வாழை).
- மற்ற சொற்கள்
(இராட்டினவாழை) - (செத்தல்) - (சோடை) - (நுகும்பு) - (மொந்தன்) - - (வாழைக்கச்சல்) - (வாழைமட்டம்) - (கட்டையிலை) - (வாழைப்பூ) - (வாழைத்தார்) - (வாழைச்சீப்பு) - (ஊதல்)