உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மிருதன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • மிருதன் என்றால் மிருக குணம் கொண்ட மனிதனைக் குறிப்பிடும் சொல் என்று பொருள் கொள்வது சரியாகப்படவில்லை...மெதுவானவன், கண்ணியமானவன், எளியவன், மெல்லியவன் என்றெல்லாம் அர்த்தமுடையச் சொல்...பஞ்சைப்போல மிருதுவாக இருக்கிறது என்னும் சொற்றொடரில் உள்ள மிருதுவாக என்பதின் அர்த்தம்தான் இங்கும்...இந்தச் சொல்லிற்கு மூலம் मृदु--ம்ருது3 என்னும் வடசொல்லாகும்...இதற்கு ஆங்கிலத்தில் soft,mild,smooth ஆகிய பதங்கள் அர்த்தங்களாகும்...மிருக குணம் கொண்ட மனிதனை மிருகன் என்றே குறிப்பிடவேண்டும்...இதற்கு வடமொழி मृग--ம்ருக3 மூலம்...எனக்குத் தெரிந்ததை எழுதினேன்!..விடயமறிந்தோர் முடிவு செய்துக் கொள்ளுங்கள்--Jambolik (பேச்சு) 22:25, 11 திசம்பர் 2015 (UTC)Reply
@Jambolik: சமற்கிருதம்: मृत-ம்ருʼத (இறப்பு) > தமிழ்: மிருத்து (இறப்பு) --> மிருதம் (பிணம்) --> மிருதன் (பிணமாய் வாழ்பவன் = Zombie). மிருத்தியுஞ்சயன் (சாவை வென்றவன்) என்ற வழக்குடன் ஒப்புநோக்குக. தொடர்புடைய மதன் கார்க்கியின் கீச்சு: இணைப்பு. நாம் Zombie = பிணன் எனத் தமிழில் வழங்கலாம். --மதனாகரன் (பேச்சு) 04:09, 12 திசம்பர் 2015 (UTC)Reply
அவ்வாறே பயன்படுத்தினால் ஏற்படும் குழப்பங்கள் இதிலும் கூட... தமிழ்ச் சொற்களை வழங்கினால் சிக்கலில்லை. --மதனாகரன் (பேச்சு) 06:06, 12 திசம்பர் 2015 (UTC)Reply
  • உண்மைதான்...இந்த மிருதன் என்னும் சொல்லிலேயே பாருங்கள்...உயிர்மெய் எழுத்துகள் ஒரு சொல்லின் நடுவில் வரும்போது மெல்லொலியாகவும், சொல்லின் முதலில் அல்லது நடுவில் இரட்டித்து வரும்போது வல்லொலியாகவும் ஒலிக்கவேண்டும் என்பது தமிழ் மரபு/இலக்கணம்...அதன்படி மிருதன் என்னும் சொல்லில் த என்பது மெல்லொலியாதலால் அதற்கு மூலச்சொல்லாக மெல்லொலி உள்ள வடசொல்தான் வேர்ச்சொல்லாக இருக்கவேண்டும்...அதாவது मृदु என்னும் சொல்...இதன் பொருளும் வேறு...ஆனால் வல்லொலி உள்ள 'मृत|मृत என்பது வேர்ச்சொல்லாகக் காட்டப்படுகிறது...மேலும் இந்த மிருதன் என்னும் சொல் பெரும் தமிழ் அகராதிகளில் காணப்படவில்லை...ஒருவேளை இடைக்காலத்தில் தமிழில் நுழைக்கப்பட்ட வடசொல்லோ?--Jambolik (பேச்சு) 15:11, 12 திசம்பர் 2015 (UTC)Reply
மிருதன் என்பது மதன் கார்க்கியால் புதுக்கப்பட்ட படைப்புச்சொல்லாக இருக்கலாம் என நினைக்கின்றேன். Zombie குறித்த எண்ணக்கரு தமிழுக்குப் புதியது. எனவே, திரைப்படத் தலைப்புக்காக, மிருதம் என்னுஞ் சொல்லிலிருந்து அச்சொல்லை ஆக்கியிருக்க வாய்ப்புண்டு. மிருதசஞ்சீவினி என்ற சொல் காஞ்சிப் புராணத்தில் ஆளப்பட்டுள்ளது. 1842இல் வெளிவந்த பெயரகராதியில் (யாழ்ப்பாணத்து அகராதி) மிருதம் = மரணம் எனக் குறித்திருத்தலைக் காணலாம். சில வடசொற்களில் மரபாகவே வல்லொலி இரட்டிக்கப்படாமல் எழுதப்பட்டு வருவதுண்டு. சீதை, சானகி, சனகன், சாதகம் போன்ற வடசொற்களுடன் ஒப்புநோக்குக (இங்கு வல்லொலி இரட்டித்து எழுதப்படும் மிருத்து என்ற சொல்லும் உண்டு.). --மதனாகரன் (பேச்சு) 17:58, 12 திசம்பர் 2015 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:மிருதன்&oldid=1394315" இலிருந்து மீள்விக்கப்பட்டது