பயனர் பேச்சு:மதனாஹரன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தொகுப்பு

தொகுப்புகள்


அமைப்பியல்[தொகு]

password cracking என்ற சொல்லில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். கடந்த மூன்று வருடங்களாக இங்கு பங்களிக்கிறேன். இதுவரை பலரிடம் உரையாடியதில் இருந்து, ஒவ்வொரு சொல்லிலும் சில மாற்றங்கள் இருந்தால் நன்றாக இருக்குமென எண்ணுகிறேன். அதனையே அங்கு மாற்றியுள்ளேன்.கீழ்கண்டவைகளை கவனிக்கவும்.

  1. ஆங்கிலக் கூட்டுச் சொற்களுக்கு ஒலிப்பு/பலுக்கல், இங்கு உருவாக்கப்படுவதில்லை. அதனால் அதனை இணைக்க வேண்டாம்.
  2. பகுப்பிடுங்கள்
  3. பொருள்களை (#குறியீடு மூலம்) வரிசைப்படுத்துங்கள்
  4. அதற்கு அகத்தொடர்பு (internal link) செய்யுங்கள்

மற்றவை உங்கள் கருத்துக் கண்டு.--04:36, 11 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

நன்றிகள்! நான் இது வரை விக்கிப்பீடியாவில் மட்டுமே பங்களித்து வந்தேன். தற்போது தான் விக்சனரியில் பங்களித்து வருகிறேன். உதவியமைக்கு நன்றி! --மதனாஹரன் (பேச்சு) 04:38, 11 மார்ச் 2012 (UTC)

தமிழ் ஆதாரங்களை எப்படி இணைப்பது? அதற்கான வடிவமைப்பை வழங்கி உதவுகின்றீர்களா? --மதனாஹரன் (பேச்சு) 04:39, 11 மார்ச் 2012 (UTC)

தமிழ் சொற்களை ஏறத்தாழ 6, 7 வகையாக வருகிறது. அனைத்திற்கும் உரிய தமிழ் ஆதாரங்களை தர, {.{தமிழ்ஆதாரங்கள்}} என்ற வார்ப்புருவினை இட்டாலே போதும்.(எ. கா.) அரி(ஒரு சொல் பல பொருள்), அரசர்சின்னம், யானை (ஒரே பொருள் பல சொல்) , அம்மா, ஐம்பெருங் காப்பியங்கள் (ஒரு சொல் சில பொருள்), அக்கம்பக்கம் (இரண்டிரண்டாக இணைந்துள்ள சொற்கள்) இப்படி பல சொல்லலாம்.
இதுபற்றி தெளிவான புரிந்துணர்வு அனைவரிடத்திலும் வரவேண்டும். கலந்துரையாடல்களில் கருத்துவேறுபாடு இருக்கிறது. உரையாடலும் முழுமையாக நடைபெறவில்லை. பல உரையாடல்கள் விரவிக்கிடக்கிறது. அதனை ஒருங்கிணைக்க சிந்திக்கிறேன். உங்களுக்கு எது ஒத்து வருகிறது என்று பாருங்கள். விரைவில் தமிழ்-தமிழ்-ஆங்கிலம் அகரமுதலி இலக்கிய மேற்கோள்களுடன் பதிவேறும். அதற்கு தேவையான கணினிநிரல்கள் பற்றி சில நண்பர்களுடன் ஆலோசிக்கிறேன். தமிழ் சொல் தலைசிறந்த முறையில் அமைக்க என்னால் ஆனதை முயற்சிக்கிறேன். பலரது ஒத்துழைப்புத் தேவை. நீங்களும் இப்பணியில் கைகோர்ப்பீர்கள் என எண்ணி முடிக்கிறேன். வணக்கம்.--04:59, 11 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

படம் பொருந்துமா?[தொகு]

doubled pawn என்பதில் இணைக்கப்பட்டுள்ள படம் பொருத்தமாக உள்ளதா?--05:13, 11 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

இல்லை. இந்தத் தொடுப்பில் உள்ள விளக்கத்தைப் பாருங்கள். அது போன்ற படமே வர வேண்டும். --மதனாஹரன் (பேச்சு) 10:16, 11 மார்ச் 2012 (UTC)
சரி.படத்தை நீக்கிவிடுகிறேன்.--00:28, 12 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

உங்களின் பங்களிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. அவ்வப்பொழுது படங்களை இணைப்பது சிறப்பு. இறுதியாக மேற்கண்ட பகுப்பினையும் இணைக்க வேண்டுகிறேன். நன்றி.மீண்டும் சந்திப்போம். வணக்கம்--07:34, 18 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

நன்றிகள்! நான் பிரதானமாக விக்கிப்பீடியாவிலேயே பங்களித்து வருகின்றேன். விக்சனரியில் பங்களிப்பது குறைவு! என்னுடன் தொடர்பு கொள்வதற்கு தமிழ் விக்கிப்பீடியாவில் எனது பயனர் பக்கத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன். --மதனாஹரன் (பேச்சு) 09:33, 18 மார்ச் 2012 (UTC)

அம்மா[தொகு]

இங்குள்ள சில குறிப்புகளை நீக்கியமைக்கு நன்றி. உழுந்து பற்றி பூட்டர்லிப்பிடம் தெரிவித்த கருத்தை இங்கு அதற்கு சொல்லில் சேர்க்கவும். முடிந்தால் உரையாடல்களையும், அச்சொல்லின் உரையாடற் பகுதியில் பிரதியிடுக. அம்மா பற்றி அங்கு கூறிய குறிப்புகளை இங்கும், == எண்ணங்கள்== என்ற உட்பிரிவில் இடுக.-- உழவன் +உரை.. 14:08, 14 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஐயங்கள் சில! ஒரு சொல்லுக்குப் பல வழக்குகள் (கிரந்தம், கிரந்தமற்ற) இருந்தால் (எ-டு: அக்ஷரம்-அட்சரம், லோகம்-உலோகம்) ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பக்கங்கள் உருவாக்க வேண்டுமா? அல்லது வழிமாற்று அமைக்கவேண்டுமா? வழிமாற்று அமைப்பதாயின், தமிழ் இலக்கண முறைப்படி அமைந்த சொல்லுக்கு அமைப்பதா? பொது வழக்கில் கூடுதலாக உள்ளதற்கு அமைப்பதா? இன்னுமோர் அகரமுதலியின் துணையை எந்தளவுக்குப் பயன்படுத்தலாம்? இன்னுமோர் அகரமுதலியில் உள்ள பொருளைக் குறிப்பிட்டு விக்சனரியின் வடிவமைப்பில் தரலாமா? இன்னுமோர் அகரமுதலியிலுள்ள இலக்கிய மேற்கோள்களை இங்கே பயன்படுத்தலாமா? குறிப்பாக, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியினைப் பற்றிக் கேட்கிறேன்.--மதனாகரன் (பேச்சு) 05:42, 15 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
வருகைக்கு நன்றி. மதனா! நீங்கள் ஏற்கனவே, பல சொல் பற்றிய உரையாடல்களை விக்கிப்பீடியாவில் கண்டுள்ளீர்கள். எனவே, அது பற்றிய குறிப்புகளை, இங்கு இடக் கோருகிறேன். அனைத்தும் தனித்தனிச் சொல்லாக அமைதலே சிறப்பு. மிகநெருக்கமாக இருக்கும் சொற்களைத் தவிர்க்கலாம். இங்குள்ள பகுப்பு:புறமொழிச் சொற்கள் என்பதனையும் காணவும்.அதில் எனக்கு ஜன்னல் உருவாக்கம் பிடித்துள்ளது. அதாவது மூலச்சொல் பற்றிய விளக்கம். சென்னைப்பேரகர முதலியின் தரவுகளை இங்கு பயன்படுத்த நிரலாக்கம் நடைபெற்றுக் கொண்டுள்ளது. நீங்கள் வேற்றுமையுருபு தழுவல்கள் பற்றி விரிவாக்கினால் நன்றாக இருக்கும். அகரமுதலி தளத்தில் அதுபற்றியுள்ளது. சரியான பக்க இணைப்பை இப்ப தர இயலவில்லை.மற்றவை பிறகு..-- உழவன் +உரை.. 06:40, 15 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

சென்னைப் பேரகரமுதலியினதோ ஏனைய அகரமுதலிகளினதோ தரவுகளை இங்கே பயன்படுத்துவது பதிப்புரிமை மீறலா என விளக்கக் கோருகின்றேன். இப்பக்கத்தில் சென்னைப் பேரகரமுதலியின் தரவுகளைப் பயன்படுத்தியுள்ளேன். இது பதிப்புரிமை மீறலா? வேற்றுமையுருபு தழுவல்கள் என்று எதனைக் குறிப்பிடுகின்றீர்கள்? --மதனாகரன் (பேச்சு) 06:44, 15 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

  • நான் அறிந்தவரை அதுபோன்ற உரிமை சிக்கல்எழ வாய்ப்பில்லை. நாம் நிறைய மாற்றங்களை இங்கு கொண்டுவர உள்ளோம். இந்திய சட்டப்படி,60 ஆண்டுகளுக்கு மேலானப் பதிப்புகளுக்கு , சட்டஉரிமை பொருந்தாது.

இன்னுமோர் ஐயம்! ஒரு சொல் தமிழெழுத்துகளிலோ தமிழிற்பயன்படுத்தப்படும் கிரந்த எழுத்துகளிலோ அமைந்திருந்தால் அது பிறமொழிச் சொல்லாயினும் தொடக்கத்தில் வரும் தலைப்பில் தமிழ் என்றே குறிப்பிடுவதா (எ-டு: பில்லியன், அக்ஷரம், அதிபர்)? இங்கே நான் உருவாக்கிய சொற்களின் வடிவமைப்புச் சரியாக அமைந்துள்ளதா எனக் குறிப்பிடுங்கள். சரியாக அமைந்திருப்பின், அவ்வாறே ஏனைய சொற்களைப் பற்றியும் எழுதுகின்றேன். குறைபாடுகள் இருப்பின், சுட்டிக் காட்டுங்கள். நன்றி! --மதனாகரன் (பேச்சு) 07:21, 15 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

  • அங்கேயே காண்பதற்கு வசதியாகவும் என் எண்ணங்களை இட்டுள்ளேன்.//. குறைபாடுகள் இருப்பின், சுட்டிக் காட்டுங்கள்.// நிறையை நோக்கி நாம் நகர்கிறோம். எனவே, அனைவரிடத்திலும் ஏதேனும் விடுபட்டவை இருக்கலாம். இருக்கும்.அதனை குறை என்று நான் கருதுவதில்லை.சந்திப்போம். ஒரு சொல் உருவாக்கிவிட்டு, பிறரிடம் நீங்கள் ஆலோசனைக் கேட்டல் சிறப்பான வழியென்று எனக்குப்படுகிறது. ஏதேனும் மாற்றங்கள் தேவைப்படின் அந்த ஒன்றை அடிப்படையாக க் கொண்டு, புதிய சொற்களை உருவாக்கி விடலாம்.மற்றவை உங்கள் கருத்துக்கண்டு..-- உழவன் +உரை.. 11:19, 15 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

புதுச்சொல்லிற்கான ஒலிக்கோப்பு[தொகு]

தேமதுர தமிழோசை உலகெமெல்லா.. என்பதற்கு ஏற்ப உங்களுக்கு தமிழ் ஒலிப்புக் கோப்புகள் உருவாக்குவதில் ஆர்வம் இருக்கிறதா? அது புதுச் சொல் உருவாக்குதலைவிட எளிமையானது. -- உழவன் +உரை.. 11:38, 15 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஒலிக்கோப்பு உருவாக்கத்தில் எனக்கு அவ்வளவு ஆர்வமில்லை. --மதனாகரன் (பேச்சு) 11:39, 15 செப்டெம்பர் 2012 (UTC).[பதிலளி]
சரி. நீங்கள் புதிதாக உருவாக்கும் சொற்களை, இது போல கோர்த்து வைக்கவும். ஒலிக்கோப்பில் ஆர்வமுடையவருக்கு அதனை அனுப்பி விடுகிறேன். நானும் விரைவில் அதனைச் செய்ய உள்ளேன்.பைத்தானில் ஒலிப்பதிவு க் கருவியொன்றை நண்பரொருவர் உருவாக்கியுள்ளார். அதன் சிலபகுதிகள் இன்னும் உருவாக்கப்பட வேண்டியுள்ளது.அது வந்தால், நாம் பேசிய சில நிமிடங்களில், நமது கணினியேத் தானியக்கமாக, விக்கிப் பொதுவகத்திற்கு ஏற்றி விடும். அதனால் இங்கும் பிற விக்கி திட்டங்களிலும் தானாகவே தெரியும். அது வந்தவுடன் கூறிகிறேன்.

உங்களுக்கு நிரல் எழுதும் ஆற்றல், எக்கணினி மொழியில் உள்ளதென நான் அறிய விரும்புகிறேன்.அதற்கேற்றாற் போல உங்கள் வீச்சை அதிகரிக்கலாம்.சரி மீண்டும் சந்திப்போம். வெளியில் செல்கிறேன்.வந்தவுடன் உங்கள் பதிலறிவேன்.-- உழவன் +உரை.. 11:51, 15 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

விசுவல் பேசிக்கு (சிறிதளவு), மீப்பாடக் குறிமொழி ஆகிய மொழிகளை மட்டுமே அறிந்துள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 11:54, 15 செப்டெம்பர் 2012 (UTC) --மதனாகரன் (பேச்சு) 06:52, 25 ஏப்ரல் 2015 (UTC)[பதிலளி]

//I had to write a Visual Basic script as a custom module to run inside AutoWikiBrowser for the extraction. Do you know computer programming?// என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டிருந்தார். அது நீங்கள் குறிப்பிடும் மொழிதானே?-- உழவன் +உரை.. 12:05, 15 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

இப்ப ஒரு 5 நிமிடம் கூகுள் அஞ்சலுக்கு வரமுடியுமா? என்னிடம் இக்கேள்வியைக் கேட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது.-- உழவன் +உரை.. 12:08, 15 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்[தொகு]

reading room என்ற சொல்லில் ஏற்படுத்திய மாற்றம் கண்டு மகிழ்ந்தேன். அதற்குரிய உசாத்துணையில் முறிவு ஏற்பட்டுள்ளது. அதற்குரிய தீர்வினை கூற இயலுமா? ஏனெனில், ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்கமுறிவுகள் உள்ளன. மேலும், ஒவ்வொரு பொருளுக்கு முன்னும் # குறியினைப் பயன்படுத்துங்கள். தற்போது * குறி பயன்படுத்துவது பழைய முறை. அது வேண்டாம். தமிழ் சொற்களில் மொழிபெயர்ப்புகள் பகுதியில் இந்த # பயன் அளிக்கிறது. அதனையே அனைத்து சொற்களிலும் பயன்படுத்த விரும்புகிறேன். ---- உழவன்+உரை.. 06:05, 2 சூலை 2015 (UTC) [பதிலளி]

@Info-farmer: இந்தச் சிக்கல் 2012இலிருந்து (அதற்கு முன்னைய நிலை தெரியவில்லை.) இருக்கிறது. அவர்களுடைய தரவுத்தளத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இருக்கலாம். --மதனாகரன் (பேச்சு) 06:16, 2 சூலை 2015 (UTC)[பதிலளி]
தமிழ் இணையப் பல்கலைக்கழக இணையத்தளத்தின் குறிமுறையை அலசிப் பார்த்ததில் அங்கு இப்போது யாவாக்கிறிட்டைப் பயன்படுத்துவதை அறிந்து கொண்டேன். எடுத்துக்காட்டாக, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் அகராதியில் தேடுவதற்கு http://tamilvu.org/slet/pmdictionary/madsfse.jsp?serword=சொல் என்றவாறு "சொல்" என்ற இடத்தில் தேவையான ஆங்கிலச் சொல்லைப் (இங்குத் தமிழ்ச் சொல்லைத் தேடக்கூடாது.) பதிலீடாக இட்டு இணைப்புகளை மாற்ற வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 06:34, 2 சூலை 2015 (UTC)[பதிலளி]
reading room பக்கத்திலுள்ள இணைப்பு, சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியைச் சுட்டுகின்றது. அது தவறு. மேலே கூறிய ஆங்கில அகராதியையே அச்சொல்லிற்குப் பயன்படுத்த வேண்டும். சென்னைப்பல்கலைக்கழகப் பேரகராதியில் தேடுவதற்கு http://tamilvu.org/slet/servlet/srchlxpg?editor=மதனாஹரன்&key_sel=Tamil&GO.x=40&GO.y=28 என்றவாறு (இங்கு ஆங்கிலச் சொல்லைத் தேடக்கூடாது.) பயன்படுத்த வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 06:51, 2 சூலை 2015 (UTC)[பதிலளி]
பயனுள்ள தகவல்கள். முறைப்படி அறிவித்து விட்டு அனைத்து சொற்களிலும் வேண்டிய மாற்றங்கள் செய்வோம். வணக்கம்.---- உழவன்+உரை.. 02:28, 5 சூலை 2015 (UTC)[பதிலளி]
reading room என்பதில் தங்கள் குறிப்புகளை இட்டுப் பார்த்தேன். சரியாக வரவிலை. என்ன செய்ய வேண்டும்?---- உழவன்+உரை.. 04:53, 20 சூலை 2015 (UTC)[பதிலளி]

வார்ப்புரு:தமிழில் விளக்கவும்[தொகு]

உடன் செய்தளித்தமைக்கு மிக்க நன்றி. வார்ப்புரு:தமிழில் விளக்கவும் என்பதன் அமைவை, இச்சொல்லில் காணவும். பொருள் என்ற தலைப்புக்கு அடுத்து நேராக கீழே வருமாறு, கொஞ்சம் வலப்பக்கம் நகர்த்தித் தருக.--தகவலுழவன் (பேச்சு) 10:02, 10 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

@Info-farmer: எப்படி அமைய வேண்டுமெனப் புரியவில்லை. இன்னும் சற்று விளக்கமாகக் கூற முடியுமா? அல்லது வார்ப்புரு எப்படி அமைய வேண்டுமென ஒரு படிமத்தில் வெட்டி ஒட்டிக் காட்டினால் உதவியாக இருக்கும். --மதனாகரன் (பேச்சு) 12:09, 10 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
இப்போது இறுதியாகச் செய்த மாற்றத்தைக் கவனியுங்கள். அதனைத் தான் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். --மதனாகரன் (பேச்சு) 12:12, 10 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

இப்படம் போல சற்று வலப்புறம் தள்ளி அமைய மாற்றம் செய்யக்கோருகிறேன். --தகவலுழவன் (பேச்சு) 13:19, 10 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

நன்றி மதனா! உங்கள் உதவியால் நானே அமைத்துக் கொண்டேன்.--தகவலுழவன் (பேச்சு) 13:22, 10 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

திட்டப்பக்கம்[தொகு]

விக்சனரி:விக்கிமீடியா-தமிழ் இணையக் கல்விக்கழகக் கூட்டுமுயற்சி என்பதில் இணைய, உங்களைக் கோருகிறேன். குறிப்பாக உங்களின் தொழினுட்ப மேம்பாடுகளை எதிர்நோக்குகிறேன். ஏற்கனவே அவ்வப்போது நீங்கள் உதவியே வந்துள்ளீர்கள். எனவே, இணைக. ஆவலுடன்..--தகவலுழவன் (பேச்சு) 02:07, 20 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

இணைந்தமைக்கு நன்றி. மதனா! விக்சனரி:விக்கிமீடியா-தமிழ்_இணையக்_கல்விக்கழகக்_கூட்டுமுயற்சி#திட்டத் தரவு என்பதில் இருபகுப்புகளின் எண்ணிக்கையும், தனித்தனியாக் தானியக்கமாக காட்ட வழி செய்துள்ளேன். அதுபோலவே, இரண்டினையும் இணைத்து ஒட்டு மொத்தமாகக் காட்ட இயலுமா?--தகவலுழவன் (பேச்சு) 03:27, 21 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

Yஆயிற்று --மதனாகரன் (பேச்சு) 03:52, 22 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

இருப்பினும், மேலும் செம்மைப் படுத்துக. ஏனெனில், சரியாக இற்றை ஆக வில்லை. திட்டபக்கத்திலும், அனைத்து பகுப்புபக்கத்திலும் கடைசியாக சேமித்ததே காட்டுகிறது. உடனுக்குடன் இற்றையாகவில்லை. எனவே, சீர் செய்க. பொதுவகத்தின் பகுப்பில் ஆகிறது. ஆவலுடன்..--தகவலுழவன் (பேச்சு) 16:29, 23 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

இது இடைமாற்று தொடர்பான சிக்கலே. ஒரு முறை இடைமாற்றை நீக்கி விட்டால் (Purge) தான் உடனடியாக இற்றையாகும். சொற்களைப் பதிவேற்றிய பின், மேற்கூறிய பக்கத்தின் இடைமாற்றையும் நீக்கி விட்டால் சரியாகி விடும். --மதனாகரன் (பேச்சு) 17:17, 23 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

பகுப்பு[தொகு]

  • கெளபீனம், ‎கோமதி, ‎ வெறுங்கை ஆகிய பக்கங்களிலும் பகுப்பிடலில் தவறுகள் இருப்பதாகக் கருதுகிறேன்...ஆராய்ந்து

தவறுதான் எனில் அவைகளையும் அகற்றிவிடுமாறு கோருகிறேன்--'கடிதல்' என்னும் பக்கத்தையும் சரி செய்ததற்காக நன்றி...Jambolik (பேச்சு) 01:03, 10 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

@Jambolik: பக்க உள்ளடக்கத்தில் "முருகன்", "இலக்குமி" போன்ற சொற்கள் இருந்தால் முறையே, பகுப்பு:முருகனின் வேறு பெயர்கள், பகுப்பு:லட்சுமியின் பிற பெயர்கள் ஆகிய பகுப்புகளைச் சேர்க்குமாறு, @Balajijagadesh:, விக்கித்தானுலாவியை ஓட விட்டிருக்கிறார். மேற்கூறிய பக்கங்களில் "இரா. முருகன்", "சேதுபு. இலக்குமி." என்று இருப்பதால் பகுப்புகள் தவறாக இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல பக்கங்களில் இன்னும் பல தவறான பகுப்புகள் இணைக்கப்பட்டிருக்கலாம் என ஐயம் எழுகின்றது. பார்க்க: எச்சு. @Info-farmer: தங்கள் கவனத்திற்கும். --மதனாகரன் (பேச்சு) 16:38, 11 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:மதனாஹரன்&oldid=1394277" இலிருந்து மீள்விக்கப்பட்டது