உள்ளடக்கத்துக்குச் செல்

கோடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கோடு (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. (ஒரு பரப்பில்) ஒற்றைப் பரிமாணத்தில் நீளவாக்கில் இருக்கும் பதிவு
  2. (தோலில் ஏற்படும்) சுருக்கம்
  3. குன்று, மலை, மலைப்பகுதி, முகடு, மேட்டு நிலம்
  4. கொம்பு, தந்தம், எயிறு
  5. மரக்கொம்பு
  6. வளைவு, கோணல், நடுநிலை நீங்குகை, நடுநிலை பிறழ்தல்
  7. கொம்புக் குறியீடு (கெ, கே போன்ற உயிர்மெய் எழுத்துகளில் வரும் குறியீடு)
  8. (இலங்கையில்) நீதிமன்றம்
விளக்கம்
  • மலை, மலைப் பகுதி, மேட்டு நிலம் என்னும் பொருளில் கோடு என்னும் சொல் பல ஊர்ப் பெயர்களோடு இணைந்து வழங்கப்படுவதைக் கன்னியாகுமரி மாவட்டத்தில் காணலாம். எ.டு.: கொற்றிகோடு வேங்கோடு, கொல்லங்கோடு, திருச்செங்கோடு, திருவிதாங்கோடு, ஏற்றக்கோடு, வெள்ளிகோடு.
  • கோடு என்பது வளைந்தது என்னும் பொருள் தரும் சொல். கொடு, கொடி முதலியனவும் இதனோடு தொடர்புடையவை. கோடு என்பது வினையாகக் கோடுதல் (வளைதல், பிறழ்தல்) என்னும் பொருள் தரும். அறம் நீதித் துறைகளில் ஒருபாற் கோடாமை என்பது ஒருபக்கம் (பால்) சாயாமை (வளையாமை) என்னும் பொருள் தரும் தொடர்.
பயன்பாடு
  • தரையில் குச்சியால் கோடு கிழித்து விளையாடினர்.
  • கோடு போட்ட சட்டை.
  • நெற்றியில் கோடு விழுந்திருக்கிறது.

(இலக்கியப் பயன்பாடு)

  • கோடின்றி வட்டாடல் கொள்வ தொக்கும் (தாயு. நினை. 2)
  • பொற்கோட் டிமயமும் (புறநா. 2, 24)
  • குமரிக் கோடும் (சிலப். 11, 20)
  • மத்த யானையின் கோடும் (தேவா. 39, 1)
  • சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
    கோடாமை சான்றோர்க்கு அணி (குறள்118)

(இலக்கணப் பயன்பாடு)

  • விலங்கு பெற்றும் கோடுபெற்றும் புள்ளி பெற்றும் (தொல். எழுத். 17, உரை)
மொழிபெயர்ப்புகள்


ஆங்கிலம்

  1. line
  2. furrow
  3. hill, peak, high ground
  4. horn, tusk
  5. branch
  6. bend, crooked, partiality
  7. symbol (modifying Tamil vowels/consonants)
  8. court
கோடு
நேர்க்கோடு, வளைகோடு, எல்லைக்கோடு
திருச்செங்கோடு


ஆதாரங்கள் ---கோடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோடு&oldid=1968506" இலிருந்து மீள்விக்கப்பட்டது