கோணல்
Appearance
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
கோணல்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- bend, wryness, obliquity, deflection
- hump, deformity
- crookedness, as of mind
- uneasiness of mind
விளக்கம்
- கொன்றை -> கொன்னை => கோணை
பயன்பாடு
- கோணலான தென்னை மரம் - crooked coconut tree
- கோணல்மாணலான தெரு - crooked street
- சிறுமி கோணல்மாணலாக ஏதோ எழுதினாள்.
- கோணல் மூஞ்சி
- ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம் (பழமொழி)
- பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும் (பழமொழி)
- முதல் கோணல் முற்றிலும் கோணல் (பழமொழி)
- கோணல் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி (பழமொழி)
- அந்தக் கிணற்றைச் சுற்றி ஏழெட்டுத் தென்னை மரங்கள் கோணல் மாணலாக நின்றன (ஒரு கோட்டுக்கு வெளியே, சு. சமுத்திரம்)
- கோணல் வாயையும், நீள மூக்கையும், கோமாளித்தனமான தோற்றத்தையும் பார்த்த்ததுமே நமக்கு இதற்கு முன்பே எங்கோ பார்த்திருக்கிறாற் போன்ற நினைவு வருகிறதல்லவா? (பாண்டிமாதேவி, நா.பார்த்தசாரதி)
- அவளுடைய உதடுகளும் கை கால்களும் பயங்கரமாகவும் கோணல் மாணலாகவும் இழுத்தன. (அலை ஓசை, கல்கி)
( சொற்பிறப்பியல் )
ஆதாரங்கள் ---கோணல்---DDSA பதிப்பு + வின்சுலோ +
:நேர் - வளைவு - கூனல் - கோணல்மாணல் - கோணு