வைணவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
படிமம்:Bhagavan Vishnu.jpg
வைணவம்:
நாராயணன்/விஷ்ணு/திருமால்
ஆதிசேஷன் மீது, பாரியை இலக்குமியுடன் நாராயணன் தரிசனம்
(கோப்பு)
1.வைணவம் என்பது, ஒரு பெயர்ச்சொல்.
  • தமிழில் மாலியம் எனப்படுகிறது...
  • வைணவம் என்பது நாராயணனை முழுமுதற் கடவுளாக வழிபடும் இந்து சமயத்தின் ஒரு பிரிவு...
  • இவர்களை ஸ்ரீவைஷ்ணவர்கள் என்றுக் குறிப்பிடுவர்...
  • இவர்களில் வடகலையார், தென்கலையார் என இரு பிரிவுகள் உண்டு...
  • இவர்களுக்கு சமசுகிருதமும், தமிழும் புனிதமான மொழிகள் ஆகும்...
  • நாராயணனை விஷ்ணு, திருமால்,சேஷசயனன் போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருப்பெயர்களால் அழைப்பர்...
  • இந்தப் பெயர்கள் அனைத்தும் அடங்கிய நூலே ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்...
  • இத் திருப்பெயர்களில் மகாபாரதத்தில் காணப்படும்வகையே புகழ்மிக்கது...ஸ்ரீவைஷ்ணவர்கள் சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஓதும் இந்த நூல் மிகப்புனிதமானது...
  • இது மகாபாரதத்தில் குருசேத்திரப் போரின்போது மரணப்படுக்கையில் கிடந்த பீஷ்மர் யுதிஷ்ட்டிரருக்கு உபதேசித்தது...
  • இந்துச் சமய மும்மூர்த்திகளுள் ஒருவரான நாராயணன் உலகை இரட்சிக்கும் கடவுளாகப் போற்றப்படுகிறார்...
  • இந்தச் சமயத்தினர் நெற்றியில் நாமம் (திருமண்) அணிவர்...
  • வடகலை மற்றும் தென்கலையாருக்கு தனித்தனி திருமண் காப்புகள் (நாமங்கள்) உண்டு...
  • இந்த மதத்தினர் தம் வாழ்நாட்களுக்குள் பூலோகத்தில் தரிசிக்கவேண்டிய வைணவத் திருக்கோயில்கள் (திவ்விய தேசங்கள்) 106...
  • மொத்த திவ்விய தேசங்களான 108 தலங்களில், திருப்பாற்கடலும், திருவைகுந்தமும் மேலுலகில், மண்ணுலகை விட்டபின்னர்தான் தரிசிக்கமுடியும்...
சொல் வளப்பகுதி----------(உங்கள் மொழியறிவை, அகலமாக்கும் பகுதி.)
1.இறையியல், 2.சைவம், 3.இஃசுலாமியம், 4.கிறித்துவம், 5.நாலாயிரத்திவ்விய பிரபந்தம்
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
"https://ta.wiktionary.org/w/index.php?title=வைணவம்&oldid=1986534" இலிருந்து மீள்விக்கப்பட்டது