சிவகரந்தை
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- Sphoeranthus Zeylanicus Nob(தாவரவியல் பெயர்)//
- Sphoeranthus Amaranthoides(தாவரவியல் பெயர்)
பொருள்
சிவகரந்தை (பெ)
- ஒரு கரந்தை வகை மூலிகைச்செடி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
- மிகுந்த மருத்துவ குணமுள்ள அரியவகை மூலிகைச்செடி..நல்ல வாசனையுடையது...இந்த மூலிகையால் வமனம், அருசி, விந்து நட்டம், க்ஷீணவாதம், கரப்பான், வாதாதிதொந்தம், காசம், அக்கினிமந்தம் இவைகளை நீங்கி சடராக்கினியையும், வனப்பையும் உண்டாகும்...
பயன்படுத்தும் முறை
- இந்தச்செடி பூக்கும் முன்பே கொண்டுவந்து மண்ணில்லாமல் சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி வேரோடு எல்லா பாகங்களையும் இடித்துச் சூரணம் செய்து ஒரு புதிய மட்கலயத்தில் இட்டு கலயவாயைக்கட்டி வைத்துகொள்ளவேண்டும்...இந்தச் சூரணத்தைத் தினமும் இருவேளை காலையும் மாலையும் திரிகடி அளவு சிறிது சீனிக் கூட்டிச் சாப்பிட்டுக்கொண்டுவந்தால் நல்ல பசி உண்டாகும்...இரத்தத்திலுள்ள மாசுகள் நீங்கி சொறி, சிரங்கு, கரப்பான் முதலிய தோற்நோய்கள் போகும்...கபத்தை கரைக்கும்...விந்துஅணுவைப் பலப்படுத்தும்...நாற்பது நாட்கள் உட்கொண்டால் மேனி அழகுக் கூடும்...
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---சிவகரந்தை--- DDSA பதிப்பு + வின்சுலோ +