முல்லை
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- முல்லை, பெயர்ச்சொல்.
- கொடிவகை
- முல்லை வைந்நுனை தோன்ற (அகநா. 4)
- கொடி வகை
- காட்டுமல்லிகை
- ஊசிமல்லிகை
- ஊசி முனை இலைகள் உள்ள ஒரு கொடிவகை
- ஈசுரமூலி
- ஐந்திணையுள் ஒன்றான முல்லைநிலம். (தொல். பொ. 5.)
- முல்லைநிலப்பண்வகை
- சாதாரிப்பண்
- உரிப்பொருளில் ஒன்றாகிய இருத்தல்.
- முல்லை சான்ற புறவு (மது ரைக். 285)
- கற்பு.
- தானுடை முல்லை யெல்லாந் தாதுகப் பறித்திட்டானே (சீவக. 686)
- சிறப்பியல்பு. (பு. வெ. 8, 17, உரை.)
- வெற்றி
- முல்லைத்தார்ச் செம்பியன் (பு. வெ. 9, 34)
- முல்லைப்பாட்டு. பாணிரண்டு முல்லை (பத்துப்பாட்டு, தனிப்பா.). (தக்க யாகப். 54, உரை.)
- முல்லைக்குழல். (சிலப். 17, பாட்டு 3.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - mullai
- Arabian jasmine, m. sh., Jasminum sambac
- Trichotomus-flowering smooth jasmine, m.cl., Jasminum trichotomum
- Wild jasmine
- Eared jasmine
- Pointed leaved wild jasmine, m. cl., Jasminum malabaricum
- Indian birthwort
- Forest, pastoral tract, one of ai-n-tiṇai
- A melody-type of the forest tracts
- A secondary melody-type
- Patient endurance of a lady during the period of separation from her lover
- chastity
- Chief characteristic
- victory
விளக்கம்
மிக்க நறுமணமிக்க இந்த மல்லிகைப் பூக்களின் காம்புகள் நீண்டு ஊசியைப் போலுள்ளதால் ஊசிமல்லிகை என்னும் பெயரும் உண்டு...
- மருத்துவ குணங்கள் இந்தப்பூக்களால் கணமாந்தம், வயிற்றுப்பிசம், குழந்தைகளுக்கு உண்டாகும் உதிர சம்பவப்பிணிகள்,சுரம், சோபை ஆகியவன போம்... மாலையாகவாவது, கூந்தலிலாவது அணிய இதன் நறுமணத்தால் மூளைக்கு ஒருவிதமான உற்சாகத்தை உண்டாக்கி மனோவியாதியால் நேர்ந்த உள்வெப்பத்தையும் போக்கும்
- சுண்ணவாசி - சடாபுட்பம் - கெச்சம்- தளவம் - முல்லைச்சூட்டு- முனல் - மௌவல்- யூதிகை - வரடம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +