நீறு பூத்த நெருப்பு
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
நீறு பூத்த நெருப்பு, .
பொருள்
[தொகு]- கண்ணுக்குத் தெரியாத நெருப்பு
- மறைந்திருந்து எந்தச் சமயத்திலும் வெளிப்படக்கூடிய பகைமை, கோபம் முதலிய உணர்ச்சிகள்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- smouldering fire
- hidden feelings like enmity, anger etc., similar to the idiom tinderbox situation
விளக்கம்
[தொகு]- கரி, விறகு அடுப்புகளில் தீ வெகுநேரம் எரிந்த பின்னர், அணைக்கப்படாதபோது இயல்பாகவே சிறிது சிறிதாக அணைந்துவிடும்...ஆனால் உட்புறம் நெருப்பு கனன்றுக் கொண்டேயிருக்கும்...முற்றிலுமாக தானே அணைய நீண்ட நேரம் ஆகும்...அந்த நேரத்தில் நெருப்பின் மீது இலேசாக சாம்பல் (நீறு) படியும் (பூக்கும்)...இதையே 'நீறு பூத்த நெருப்பு' என்பார்கள்...தப்பித்தவறி ஏதேனும் எளிதில் தீப் பிடிக்கக்கூடிய காகிதம் போன்ற பொருட்கள் இந்த நெருப்பில் பட்டால் சட்டென்றுத் தீ பிடித்துவிடும்...இரு நாடுகளுக்கிடையே இருக்கும் தீராத பகை உணர்ச்சியும், இரு நபர்களுக்கிடையே இருக்கும் வெறுப்பு, கோபம் முதலிய உணர்ச்சிகளும் இத்தகையனவே...ஒரு சிறு ஆத்திரமூட்டக்கூடிய நிகழ்ச்சியால் உடனுக்குடன் வெகு நாட்கள் மறைந்திருந்த உணர்ச்சிகள் வெளிப்பட்டு பெரும் அனர்த்தங்களை ஏற்படுத்தும்.
பயன்பாடு
[தொகு]- அந்த இரு நாடுகளுக்கிடையே பகைமை நீறு பூத்த நெருப்பாக இருக்கிறது.. எப்போது ஏது நடக்குமோ தெரியாது !
- அவர்கள் இருவரும் வெளித் தோற்றத்தில் சாதாரணமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடையே வெறுப்பும், கோபமும் நீறு பூத்த நெருப்பாகயிருக்கிறது.