இரவு நேரங்களில் வானில் ஒளிரும், முனைகளுடன் கூடியச் சிறு விளக்குகளைப்போலத் தோன்றும் பொருட்கள்..வானியலில், அறிவியல் மற்றும் சமயத் தொடர்பில், இவைகளில் பலவற்றிற்குப் பெயர்களுண்டு...பண்டைய நாட்களில் இவை வானில் நிலைகொள்ளும் இடத்தைக் கொண்டு இரவு நேரத்தில் திசை மற்றும் செல்லவேண்டிய வழியைக் கண்டறிந்தனர்...ஒரு நட்சத்திரம் அல்லது ஒரு கோள் குறிப்பிட்ட இருப்பு நிலையில் மனிதர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது...