फूल
Jump to navigation
Jump to search
இந்தி[தொகு]
இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: பூ2ல்
சொற்பிறப்பு:
வடமொழி வேர்ச்சொல்
பொருள்[தொகு]
- फूल, பெயர்ச்சொல்.
விளக்கம்[தொகு]
- பூ--फूल என்பது மரம், செடி, கொடி, புல் முதலான தாவரங்களில் தோன்றும் ஓர் உறுப்பு... இவை பல்வேறு வகை, நிறங்களில், அநேகவிதமான மணம் வீசும் இயல்பு கொண்டவை...துர்நாற்றம் வீசக்கூடியவையும் உண்டு... இவற்றின் மிருதுத்தன்மை இனத்திற்குஇனம் மாறுபடும்.... தன் இனத்தைப் பரப்ப, காயாகிப் பழமாகி விதைகளை உருவாக்கும் முன் சூல்கொள்ளும்...பூக்கள் அலங்காரத்திற்காகவும், பெண்கள் தலையில் அணியவும், இறைவனுக்குக்கான பூசை, வழிபாடுகளிலும் பெரிதும் பயன்படுகிறது...மரியாதை, கௌரவம், பக்தி, அன்பு ஆகிய உணர்வுகளைத் தெரிவிக்கும் அடையாளமாகவும் இருக்கின்றன...சிலவகை பூக்களிலிருந்து நறுமணநீர்(scent) தயாரிப்பர்...உண்பதற்கான குல்கந்து, பூச்சுக்கான நெய் (எண்ணெய்) வகைகள், போன்ற மருத்துவப் பொருட்களைத் தயாரிக்கவும் மற்றும் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளிலும் பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன...தாமரைப்பூவின் வித்துகள், வாழைப்பூ, அகத்திப்பூ, வேப்பம்பூ போன்றவை உணவிலும் பயன்படும்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---फूल--- Hindi sabdasagaa + Mahendra caturvedi