உள்ளடக்கத்துக்குச் செல்

அன்றாடம் காய்ச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(அன்னாடங்காய்ச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)


பொருள்

அன்றாடம் காய்ச்சி, .

  1. ஏழை,
  2. தினம் உணவுக்கு பாடுபடுபவர்.
  3. தினக் கூலி
மொழிபெயர்ப்புகள்
  1. one who leads a hand-to-mouth existenceஆங்கிலம்
  2. daily wager
விளக்கம்
  • அன்னாடம் காட்சி/அன்னாடங்காய்ச்சி என்பது இதன் பேச்சு வழக்கு. தினம் வேலை செய்து அதில் சம்பாதிப்பதைக் கொண்டே உணவுப் பொருட்களை வாங்கி சமைத்து உண்ணும் நிலையில் உள்ள ஏழை என்று பொருள் படம். (ஒரு நாளுக்கு மேல் தேவையான உணவினை வாங்கும் வசதியில்லாதவர் என்று பொருள்). இங்கு “காய்ச்சி” என்ற பயன்பாடு கஞ்சி காய்ச்சுவதைக் குறிக்கிறது. (ஏழைகளின் உணவு கஞ்சி)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • சுத்தமாக ஷேவ் எடுத்த முகம். அடர்த்தியான மீசை. மேல்பார்க்க வாரி வகிடெடுத்த சிகை. பட்டைக் கண்ணாடி. திருநீறு பூசி குங்குமம் வைக்க நினைத்தார். அத்தோடு கோட் ஒட்டாது - கைரேகை ஜோஸ்சீயம்... என்று தெருவில் வருகிற அன்னாடங்காய்ச்சி போலத் தோன்றும், வேணாம் என்று விட்டுவிட்டார்.(நீயும் பொம்மை நானும் பொம்மை, எஸ். ஷங்கரநாராயணன் )



( மொழிகள் )

சான்றுகள் ---அன்றாடம் காய்ச்சி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அன்றாடம்_காய்ச்சி&oldid=974725" இலிருந்து மீள்விக்கப்பட்டது