அலவை
Appearance
அலவை (பெ)
பொருள்
(பெ)
- விடாதுபிதற்றுபவள்; விடாது பிதற்றுபவர்
- கூறத் தகாதன கூறுவோர்
- அல்லவை, கூடாதது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- கூறகூடாத (அல்லாத) சொல்லுதலால் அல்லவை. இடைவிடாது அல்லது அடிக்கடி ஏதாவது பொருத்தம் இன்றிக் ஒருவர் கூறிக்கொண்டிருத்தலால் வரை அலவை என்று அழைப்பர்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கலவ மாமயி லார்இய லாள்கரும்
- பன்ன மென்மொழி யாள்கதிர் வாள்நுதற்
- குலவு பூங்குழ லாள்உமை கூறனை வேறுரையால்
- அலவை சொல்லுவார் தேர்அமண் ஆதர்கள்
- ஆக்கி னான்றனை நண்ணலும் நல்கும்நற்
- புலவர் தாம்புகழ் பொற்பதி பூந்தராய் போற்றுதுமே.
- (சம்பந்தர் தேவாரம், திருப்பூந்தராய், பாடல் 10)
- மாய வலவைசொற் கொண்டு (திவ். திருவாய். 4, 6, 4).
ஆதாரங்கள் ---அலவை--- DDSA பதிப்பு + வின்சுலோ +