திருமாலின் பத்தினியாகிய திருமகள் மக்களுக்கு நல்கும் வரங்களின் தன்மைக்கேற்றவாறு, எட்டு தோற்றங்களில் காட்சியளிக்கிறாள்...ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, அவளருள் வேண்டி பூசிக்கும் பக்தர்கள் மனதை ஒருமுகப்படுத்தி கண்களைமூடிப் பிரார்த்திக்க, இத்தகைய தனித்தனித் தோற்றங்கள் அவசியமாகின்றன...இவ்வகையில் நோய்நொடி அற்ற உடல்நலம் பெற்று, ஆரோக்கியமாக நீண்டகாலம் வாழ்வதற்கு பூசனைக்குரிய திருமகளின் உருவத்தோற்றம் ஆதிலட்சுமி ஆகும்.