ஆமணக்குநெய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search


மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்

மருத்துவ குணங்கள்[தொகு]

  1. சூட்டுக்குணமுள்ள ஆமணக்கு நெய்யை முறைப்படிக் குடித்தால் பேதியாகும்...இதனால் கோரவாதம், குன்மம், குடலேற்றம், உடம்பு ,கண், மூக்கு, காது, வாய் இவைகளிலுண்டாகும் எரிச்சலும் போகும்...பொன்னிறமும், தாது விருத்தியும் உண்டாகும்...

பயன்படுத்தும் முறை[தொகு]

  1. பெரியவர்களுக்கு ஒரு அவுன்சு அளவு சிறிது பசுவின் பால் சேர்த்தாவது அல்லது இஞ்சி சுரசம் சேர்த்தாவது கொடுத்தால் நான்கு ஐந்து முறை பேதியாகும்...
  2. குழந்தைகளின் வயதுக்கேற்றவாறு இரண்டு மூன்று தேக்கரண்டி அளவு ஆமணக்குநெய்யை முலைப்பாலிலாவது,பசுவின் பாலிலாவதுக் கலந்துக்கொடுத்தால் உபத்திரவம் இல்லாமல் பேதியாவதுடன் அக்கினிமந்தம், வயிற்றுவலி, வாயு சம்பந்தமான நோய்களை நீக்கும்...
  3. மேலும் இது பிரசவித்தப் பெண்களுக்கும், மூலரோகிகளுக்கும், சீதபேதியுடையவர்களுக்கும் பேதி மருந்தாகக் கொடுப்பதற்குச் சிறந்தது.
  4. ஆனால் இதையே வழக்கமாக வைத்துக்கொள்ளக்கூடாது..'அவசரமாக எப்போது தேவையோ அப்போது மட்டும் இவ்வாறு உபயோகப்படுத்துவதே சிறந்தது( மொழிகள் )

சான்றுகள் ---ஆமணக்குநெய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆமணக்குநெய்&oldid=1209763" இருந்து மீள்விக்கப்பட்டது