உமாமி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்

(பெ) உமாமி

  1. ஒரு சுவையின் பெயர். இது துவர்ப்பு போன்ற சுவை. இச்சொல் நிப்பானிய மொழியில் இருந்து பெற்றது. மாந்தர்கள் நாவால் உணரும் உவர்ப்பு (கரிப்பு), இனிப்பு, புளிப்பு, கசப்பு ஆகிய நான்கு அடிப்படைச் சுவைகளைப்போல் ஐந்தாவது சுவையாக உமாமி என்னும் சுவையை அறிவியல் உலகில் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இது குளூட்டாமேட் (glutamate) என்னும் வேதியியல் பொருளை நாவில் உள்ள சுவைமொட்டுகள் உணர்வதால் ஏற்படும் சுவை. குளூட்டாமேட்டின் சுவையை 1908 இல் கிக்குனே இக்கேடா (Kikunae Ikeda)என்பவர் கண்டுபிடித்தார்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- umami
"https://ta.wiktionary.org/w/index.php?title=உமாமி&oldid=649320" இருந்து மீள்விக்கப்பட்டது