சுவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு

சுவை (பெ)

பொருள்
  1. நாவில் (நாக்கில்) உணரும் உணர்ச்சி (இது வெப்பம், சொரசொரப்பு போன்றவை அல்லாமல், இனிப்பு, புளிப்பு, கசப்பு போன்ற உணர்வுகளைக் குறிக்கும்)
  2. அறிவியலில் அடிப்படையாக நாவில் ஐந்து சுவைகளையே சுவைகள் என ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். இந்த ஐந்து சுவைகள் இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, உமாமி. (காரம், துவர்ப்பு என்பவற்றை சுவைகளாக அறிவியலில் ஏற்கப்படவில்லை)
  3. நாவில் உணர்வதாக தமிழர்கள் கூறும் ஆறு சுவைகள் இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, காரம், துவர்ப்பு
  4. உள்ளத்தின் உணர்ச்சிகள், நெகிழ்ச்சிகள் பலவும் சுவை எனப்படும். இன்பம், துன்பம், களிப்பு, இசையின்பம் என்பன போன்ற அக உணர்வுகள்.
  5. தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள எட்டுவகை மெய்ப்பாடுகளாக வெளிப்படும் உணர்ச்சிகள் சுவைகள் எனப்படும். அவையாவன நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை.

சுவை (வி)

  1. நாவால் உணரும் உணர்ச்சியைத் துய்(ப்பது).
  2. உள்ளத்தில் உணரும் உணர்ச்சிகளைத் துய்(ப்பது). (எ.கா உங்கள் கிண்டலைச் சுவைத்தேன்)
  3. வாயில் இட்டு சவை, மெல்லு.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்- taste

சொல்வளம்[தொகு]

சுவை
சுவைத்தல், சுவைச்சாறு
அறுசுவை - சொற்சுவை - பொருட்சுவை - இன்சுவை
"https://ta.wiktionary.org/w/index.php?title=சுவை&oldid=1641123" இருந்து மீள்விக்கப்பட்டது