ஊற்று.

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஊற்று.:
எனில் யானையின் கண்-காது இடையே மதநீர் சுரக்கையும் பொருளாகும்
ஊற்று.:
எனில் நீரூற்று
ஊற்று.:
எனில் ஊன்றுகோல்--இந்த மனிதன் பிடித்திருப்பது ஊன்றுகோல்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • வேர்ச்சொல்--ஊறு- பொருள் 1-3
  • வேர்ச்சொல்--ஊன்று- பொருள் 4-5

பொருள்[தொகு]

  • ஊற்று., பெயர்ச்சொல்.
  1. சுரக்கை
    (எ. கா.) ஊற்றிருந்த மும்மதத் தோடையானை (சீவக. 152).
  2. நீரூற்று
    (எ. கா.) வல்லூற் றுவரில் கிணற்றின்கண் (நாலடி. 263).
  3. கசிவு
    (எ. கா.) ஊற்றுடை நெடுவரை (சீவக. 278).
  4. ஊன்றுகோல் (சூடாமணி நிகண்டு)
  5. பற்றுக்கோடு
    (எ. கா.) உடம்புயிர்க் கூற்றாக (கலித். 146)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. flowing, gushing forth, as blood from an artery, milk from the udder; pouring of rut from a must elephant
  2. spring, fountain
  3. moisture oozing from the ground
  4. staff
  5. prop, support

விளக்கம்[தொகு]

  • இங்கு குறிப்பிடப்பட்ட சுரக்கை என்பது, இரத்த நாளங்களிலிருந்து சுரக்கும் இரத்தம், பசுவின் மடியிலிருந்து சுரக்கும் பால் மற்றும் மத யானையின் கண்ணுக்கும் காதுக்கும் இடைப்பட்ட சுரப்பிகளில் வழியும் மதநீர் ஆகியவைகளைக் குறிக்கும்..இவைகளையே ஊற்று என்றும் சொல்வர்..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊற்று.&oldid=1409248" இலிருந்து மீள்விக்கப்பட்டது